உடலுக்கு தீங்கில்லா நீரா பானம்.. சட்டசபை கேண்டீனில் எம்எல்ஏக்கள் ருசித்து பருகி மகிழ்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்னை மரத்தில் இருந்து எடுக்கப்பட்ட நீரா பானம் இன்று அனைத்து எம்எல்ஏக்களுக்கும் சட்டசபை வளாகத்தில் உள்ள கேண்டீனில் வழங்கப்பட்டது.

தென்னை மரத்தில் துளிர்விடும் பாளையில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது இந்த நீரா பானம். இந்த பானத்தை உற்பத்தி செய்ய தென்னை விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில், இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒன்று கடந்த ஏப்ரல் மாதம் முதல்வர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.

அனுமதி

அனுமதி

இந்தக் கூட்டத்தில் நீரா பானம் உற்பத்தி செய்து விற்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதனால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நீரா பானத்தை உற்பத்தி செய்ய தயாரானார்கள்.

எம்எல்ஏக்களுக்கு நீரா பானம்

எம்எல்ஏக்களுக்கு நீரா பானம்

இதனைத் தொடர்ந்து, உற்பத்தி செய்யப்பட்ட நீரா பானம் இன்று சட்டசபையில் உள்ள கேண்டீனில் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் வழங்கப்பட்டது. இதனை எம்எல்ஏக்கள் ருசித்து பருகி மகிழ்ந்தனர்.

நீரா பிஸ்கட்

நீரா பிஸ்கட்

இது தவிர, சட்டசபை வளாகத்தில் உள்ள கேண்டீனில் நீரா பிஸ்கட், தென்னை கருப்பட்டி, தென்னை சிப்ஸ் போன்ற பொருள்களும் விற்பனைக்கு வந்துள்ளன. இதனை எம்எல்ஏக்கள் மட்டுமன்றி, தலைமைச் செயலகத்திற்கு வருபவர்களும் ஆர்வத்தோடு வாங்கி சுவைக்கின்றனர்.

நீரா சர்க்கரை

நீரா சர்க்கரை

நொதிக்காத வகையில் உற்பத்தி செய்யப்படும் இந்தப் பானத்தை கொண்டு, நீரா சர்க்கரை, நீரா வெல்லம், நீரா தேன், நீரா லட்டு, நீரா கேக் போன்ற பொருள்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் இவற்றை சர்க்கரை நோயாளிகளும் இதனை சுவைத்து ருசிக்கலாம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
MLAs have Neera health drink in Secretariat Canteen for the first time.
Please Wait while comments are loading...