சட்டசபைக்கு வந்த கருணாஸ், தனியரசு நிருபர்களிடமிருந்து தப்பியோட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குதிரை பேரத்தில் குற்றம்சாட்டப்பட்ட எம்எல்ஏ-க்கள் கருணாஸ் மற்றும் தனியரசு ஆகியோர் செய்தியாளர்களிடம் இருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர்.

டைம்ஸ் நவ்- மூன் டிவி இணைந்து நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் அதிமுக எம்எல்ஏ-க்கள் சரவணன், கனகராஜ் ஆகியோர் பேசும் வீடியோ ஒன்று இரண்டு தினங்களுக்கு முன் வெளியானது.

MLAs Karunas and Thaniarasu skipped Reporters in Secretariat

அதில் கூவத்தூர் செல்ல பஸ் ஏறும் போது எம்எல்ஏ-க்களுக்கு ரூ.2 கோடியும், எம்எல்ஏ விடுதியில் ரூ.4 கோடியும், கூவத்தூர் விடுதியில் வைத்து ரூ.6 கோடியும் பேரம் பேசப்பட்டது. இந்நிலையில் கூட்டணி கட்சிகளான கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோருக்கு தலா ரூ.10 கோடி வழங்கப்பட்டது என்றும் அந்த வீடியோ பதிவில் கிடைத்தது.

இது தமிழக அரசியலில் ஒரு புயலை கிளப்பியது.வீடியோவில் இடம்பெற்றிருந்த இரு எம்எல்ஏ-க்களும் அந்த வீடியோவில் வெளியான கருத்துகள் பொய் என்று தெரிவித்தனர். அதேபோல் கருணாஸும் தான் ரூ.10 கோடி வாங்கவில்லை என்று மறுப்பு தெரிவித்திருந்தார்.

ஆட்சியை கலைக்குமாறு எதிர்க்கட்சிகள் கூறிவரும் நிலையில் இன்று சட்டசபை கூடியது. முதல் நாள் கூட்டத் தொடர் முடிவடைந்தவுடன் மனிதநேய மக்கள் கட்சி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நான் ரூ.10 கோடி வாங்கவில்லை. ஆண்டவன் மீது ஆணையிட்டு இந்த வீடியோவில் குறிப்பிட்ட தகவலை மறுக்கிறேன் என்றார்.

இதைத் தொடர்ந்து அங்கு வந்த கருணாஸ், தனியரசு ஆகியோரிடம் பேட்டி எடுக்க செய்தியாளர்கள் முற்பட்ட போது இருவரும் தப்பி ஓடினர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
MLAs Karunas and Thaniarasu escaped from Press and Media people. To support the ADMK government they was paid Rs. 10 crore each. This was released in Sting operation done by English news channel.
Please Wait while comments are loading...