For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடிகர் சங்க நிர்வாகிகள் புடை சூழ கோவையில் சந்திக்க நேரம் கேட்ட கமல்.. சந்தித்தாரா மோடி?

By Veera Kumar
Google Oneindia Tamil News

கோவை: பிரதமர் நரேந்திரமோடியை சந்திக்க கமல் ஹாசன் நேரம் கேட்டதாகவும், அது ஒதுக்கப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியான நிலையில், கமல் சந்திக்கலாம் என்று சந்தேகத்தை வெளிப்படுத்தி இருந்தார் பாஜக தமிழ் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன். ஆனால் மோடி - கமல் சந்திப்பு நடைபெறவில்லை.

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடக்கி வைப்பதற்காக, பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக இன்று கோவை வந்தார் நரேந்திர மோடி.

மோடி பிரதமரான பின்னர் தமிழகத்தில் நடக்கும் முதல் கட்சி நிகழ்வு இது தான் என்பதால் பாஜக வட்டாரத்தில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ரஜினியுடன் சந்திப்பு வதந்தி

ரஜினியுடன் சந்திப்பு வதந்தி

இந்த சூட்டோடு சூடாக ரஜினிகாந்த்துடன் மோடி சந்திப்பதாகவும் ஒரு வதந்தி கிளம்பியது. ஆனால், ரஜினி தற்போது மலேசியாவில் இருப்பதால் அந்த தகவல் வதந்தி என தெரியவந்துவிட்டது.

கமலுடன் சந்திக்கவில்லை

கமலுடன் சந்திக்கவில்லை

இந்நிலையில், பிரதமரை சந்திக்க நடிகர் கமல்ஹாசன் நேரம் கேட்டதாகவும், அதற்கு மோடி தரப்பு மறுத்துவிட்டதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சங்க விவகாரம்

நடிகர் சங்க விவகாரம்

தென் இந்திய நடிகர் சங்க கட்டிட தொடக்க விழாவில் பங்கேற்க வருமாறு, கமல் தலைமையில், நடிகர் சங்க நிர்வாகிகள், மோடியை சந்தித்து கோரிக்கைவிடுக்க திட்டமிட்டு அப்பாயின்மென்ட் கேட்டதாகவும், இதற்குத்தான் மோடி மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

கிளீன் இந்தியா தூதர்

கிளீன் இந்தியா தூதர்

கிளீன் இந்தியா திட்ட தூதர்களில் கமலையும் ஒருவராக தேர்ந்தெடுத்து அறிவித்தார் மோடி. எனவே, கமலை சந்திக்க அவர் தயாராக இருந்ததாகவும், நடிகர் சங்க விவகாரத்திற்காக சந்திக்க வருகிறார் என்று தெரிந்ததால், சந்திப்பை ஒத்திப்போட்டதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோவை பகுதிக்கு முக்கியத்துவம்

கோவை பகுதிக்கு முக்கியத்துவம்

கோவை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களிலுள்ள பிரச்சினைகளை கேட்டறிய அப்பகுதி சங்கங்கள், அமைப்புகளின் பிரதிநிதிகளை மோடி இன்று சந்திக்கிறார். எனவே நடிகர் சங்க விவகாரம் குறித்து இன்று பேச வேண்டாம் என்று அவர் கருதியிருக்கலாம் என்கிறது பாஜக வட்டாரங்கள்.

சந்திப்பு ரத்து

சந்திப்பு ரத்து

அதேநேரம், தமிழிசை சவுந்திரராஜனோ, கமலை மோடி சந்திக்க வாய்ப்பு உள்ளதாக சூசகமாக தெரிவித்திருந்தார். ஆனால் மோடி-கமல் சந்திப்பு கடைசி நேரத்தில் நடைபெறாமல் போனது.

English summary
PM Modi avoids meeting with Kamal Haasan in Coimbatore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X