For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் 8 நாட்கள் பறவைகள் கணக்கெடுப்பு

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை, தூத்துக்குடி,கன்னியாகுமரி மாவட்டங்களில் இரண்டாம்முறையாக பறவைகள் கணக்கெடுப்பு ஜனவரி 24ம் தேதி தொடங்கி 8 நாட்கள் நடக்கிறது.

நெல்லையில் ஓடும் ஜீவநதியான தாமிரபரணி மற்றும் அதனை சுற்றியுள்ள துணை ஆறுகளால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் நெல்லை அதிக அளவில் விளைவிக்கும் இடங்களாக இருப்பதால் பறவைகள் புகழிடமாக காணப்பட்டு வருகின்றன.

தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக இந்த பகுதியில் உள்ள குளங்கள் நிரம்பி காணப்படுகின்றன. இக்குளங்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள பறவைகள் நிறைந்து காணப்படுகின்றன.

Monitoring of birds and habitats from January 24

கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக வனத்துறையினர் வழிகாட்டுதலின் பேரில் அகத்தியமலை சமுதாயம் சார்ந்த இயற்கை வள பாதுகாப்பு மையம் சார்பில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 24ம் தேதி தொடங்கி பிப் 3ம் தேதி வரை கணக்கெடுப்பு நடக்கிறது.

வனத்துறை, மணிமுத்தாறு அகத்தியமலை சார்ந்த இயற்கை வள பாதுகாப்பு மையம், முத்துநகர் இயற்கை சங்கம் ஆகியவை இணைந்து இந்த கணக்கெடுப்பை நடத்த உள்ளன.

இந்த கணக்கெடுப்பில் பங்கேற்க இருப்பவர்கள் மதிவாணன், ஓருங்கிணைப்பாளர், அகத்தியமலை சமுதாயம் சார்ந்த இயற்கை வள பாதுகாப்பு மையம் என்ற முகவரியில் தொடர்பு கொண்டு வரும் 22ம் தேதிக்குள் தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
With the objective of conserving birds and important bird habitats in the three southern districts and compiling comprehensive data on the winged visitors’ population in this region, the Department of Forest has planned to organise for monitoring of these places in a sustained fashion.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X