ரஜினி வாய்ஸ்சால் அதிர்ந்த தமிழகம்.. திமுக கூட்டணியை சுமந்து சென்று கரையேற்றிய அண்ணாமலை சைக்கிள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  அனல் தெறித்த ரஜினியின் அரசியல் பஞ்ச்கள்!

  சென்னை: அண்ணாமலை படத்தில் ரஜினியின் சைக்கிள் சவாரி படத்தை கடந்த 1996-ஆம் ஆண்டு தேர்தலில் மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பயன்படுத்தியது. மேலும் திமுக- தமாகா கூட்டணியை ரஜினி ஆதரித்து பிரசாரம் செய்தார்.

  ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து நாளை அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நாளைய தினமே கட்சி, கொடி, சின்னம் ஆகியவற்றை அவர் அறிவிக்கிறார் என தகவல்கள் கூறுகின்றன.

  இந்நிலையில் அவர் கடந்த 1995-ஆம் ஆண்டு முதல் அரசியலுடன் தொடர்பில் இருக்கிறார். அந்த கால கட்டத்தில் அரசியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன, ரஜினியின் வாய்ஸ் யாருக்கு இருந்தது போன்றவற்றை காண்போம்.

  கருத்து கணிப்பு

  கருத்து கணிப்பு

  1995- இல், பிரதமர் நரசிம்ம ராவ் உடன் ரஜினிகாந்த் சந்திப்பிற்கு பிறகு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்தார். ஒரு பத்திரிகை இதழ் நடத்திய ஒரு கருத்து கணிப்பில் ரஜினிகாந்த் ஆதரவை கொண்டு காங்கிரஸ் தமிழ்நாடு சட்டமன்றத்தில் 130 இடங்கள் வரை வெற்றி பெறலாம் என்று கணிக்கப்பட்டது.

  ரஜினி திமுகவுக்கு ஆதரவு

  ரஜினி திமுகவுக்கு ஆதரவு

  1996 ல், காங்கிரஸ் கட்சி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அதிமுக) உடன்- கூட்டணி சேர முடிவு செய்தது. 1991-96-ஆம் ஆண்டுகாலத்தில் ஜெயலலிதா தனது வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்தார். பொதுமக்களின் வரிப் பணம் வீணடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ரஜினியும் அதிருப்தியில் இருந்தார். இதனால் திமுக, தமாகா கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக ரஜினி கூறினார்.

  சைக்கிள் சின்னம் படம்

  சைக்கிள் சின்னம் படம்

  தமிழ் மாநில காங்கிரஸ் தங்களது தேர்தல் சின்னமாக சைக்கிள் சின்னத்தை பயன்படுத்தியது. மேலும் அவர்களின் பிரசார சுவரொட்டிகளில் அண்ணாமலை படத்தில் ரஜினிகாந்த் சைக்கிள் சவாரி செய்த படங்கள் பயன்படுத்தப்பட்டன. மேலும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று ரஜினி பேசியது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

  முழு வெற்றி

  முழு வெற்றி

  திமுக- தமாகா கூட்டணிக்கு மக்கள் வாக்களித்தனர். இதனால் இந்த கூட்டணி 1996-இல் அமோக வெற்றி பெற்றது. அதன்பின்னர் வந்த தேர்தல்களில் திமுக காங்கிரஸுடனும், தமாகா அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் ரஜினியின் அடுத்தடுத்த வாய்ஸ்கள் எடுப்படாமல் போயின.

  கைதட்டி வரவேற்ற ரஜினி

  கைதட்டி வரவேற்ற ரஜினி

  2010-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி கலந்து கொண்ட விழாவில் நடிகர் அஜீத் குமார் பேசுகையில், பொது நிகழ்ச்சிகளுக்கு நடிகர்களை வரச்சொல்லி வற்புறுத்த கூடாது என்று பகிரங்கமாக மேடையில் அறிவித்தார். அந்த மேடையில் அமர்ந்திருந்த ரஜினி எழுந்து நின்று கைதட்டி அதனை வரவேற்றார். முதல்வர் இருக்கும் மேடையில் தனக்கு சரி என்று பட்டதும் சக கலைஞனை கைதட்டி வரவேற்ற விதம் அவரது தைரியதுக்கு ஒரு சான்றாகும்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  TMC Chief Moopanar has used Rajini's Annamalai film Cycle pose for election campaign.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற