தொழில் போட்டியில் மகன் கொலை: கொலையாளிகளை பழி தீர்க்க துப்பாக்கி வாங்கிய தாய் கைது
தேனி: தேனி அருகே தொழில் போட்டியில் மகனை கொன்றவர்களை பழி தீர்ப்பதற்காக துப்பாக்கி வாங்கிய தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேனியில், சில மாதங்களுக்கு முன், அரிசி வியாபாரிகளை தாக்கி, ஆறு லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், சந்தேகப்படும் நபர் ஒருவரை போலீசார், கண்காணித்து வந்தனர். சம்பந்தப்பட்ட அந்நபர் அடிக்கடி தேனி மாவட்டம், ஆண்டிபட்டி, சீதாராம்தாஸ் நகரைச் சேர்ந்த 50 வயது சகுந்தலா என்ர பெண்மணியின் வீட்டிற்கு வந்து செல்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார், சகுந்தலாவை ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம், உசிலம்பட்டி பேருந்து நிலையத்திற்கு வந்த சகுந்தலாவிடம் இரண்டு வாலிபர்கள் ரகசியமாக ஒரு பொருளை கொடுத்ததை போலீசார் கண்டு பிடித்தனர்.
அதன் தொடர்ச்சியாக சகுந்தலா வீட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தியதில், அவரது வீட்டில் துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்கள், கத்தி ஆகியவற்றை கைப்பற்றினர். ஆயுதங்கள் வைத்திருந்ததற்காக போலீசார் சகுந்தலாவை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சகுந்தலா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தன் மகனைக் கொன்றவர்களைப் பழி வாங்குவதற்காகவே துப்பாக்கி வாங்கியதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்ததாவது:
என் மகன், சரவணன், 25, மதுரை, செல்லூரில், நிதி நிறுவனம் நடத்தி வந்தான். தொழில் போட்டி காரணமாக, அவனை, சிலர், 2009 ம் ஆண்டு, கொலை செய்து விட்டனர். என் மகனை கொன்றவர்களை, பழி வாங்கவே, நான், துப்பாக்கி வாங்கினேன். இந்த துப்பாக்கியை, என் மகனின் நண்பர்களான, ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த, நேருபாண்டி மற்றும் மணி ஆகியோர் கொடுத்தனர்' எனக் கூறியுள்ளார்.
சகுந்தலாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நேருபாண்டி மற்றும் மணியை போலீசார் தேடி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications