For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிஎஸ்எல்வி மூலம் ஒரே நேரத்தில் பல செயற்கைக்கோள்களை ஏவுவது இது 14வது முறை!

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: இஸ்ரோ தயாரித்த பி.எஸ்.எல்.வி. ராக்கெட்கள் மூலம் ஒரே நேரத்தில் பல செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டது பற்றி பார்ப்போம்.

இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. ராக்கெட்களை தயாரித்து அதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி வருகிறது. இதில் வெற்றியும், தோல்வியும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்கள் மூலம் ஒரே நேரத்தில் பல செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டது பற்றி பார்ப்போம்.

1999

1999

1999ம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி தான் முதன்முதலாக பி.எஸ்.எல்.வி.-சி2 ராக்கெட் மூலம் ஒரே நேரத்தில் ஓஷன்சாட்-1, டிஎல்ஆர்-டப்சாட் மற்றும் கிட்சாட்-3 ஆகிய 3 செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டன.

2001

2001

2001ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதி டி.இ.எஸ்., ப்ரோபா மற்றும் பர்ட் ஆகிய 3 செயற்கைக்கோள்கள் பி.எஸ்.எல்.வி.-சி3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டன.

2005

2005

2005ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி இந்திய செயற்கைக்கோள்களான கார்டோசாட்-1 மற்றும் ஹம்சாட் ஆகியவற்றை பி.எஸ்.எல்.வி.-சி6 ராக்கெட் தாங்கிச் சென்றது.

2007

2007

2007ம் ஆண்டு ஜனவரி மாதம் 10ம் தேதி பி.எஸ்.எல்.வி.-சி7 ராக்கெட் கார்டோசாட்-2, எஸ்ஆர்இ, லபான்-டப்சாட் மற்றும் ப்ஹ்யூன்சாட்-1 ஆகிய 4 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணிற்கு தாங்கிச் சென்றது.

2007

2007

2007ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி அஜைல் மற்றும் ஆம் ஆகிய செயற்கைக்கோள்கள் பி.எஸ்.எல்.வி.-சிஏ சி8 ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டன.

2008

2008

2008ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி கார்டோசாட்-2ஏ, ஐஎம்எஸ்-1/டிபுள்யூசாட், ரூபின்-8, கான்எக்ஸ்/என்டிஎஸ், கான்எக்ஸ்-2, க்யூட்-1.7+ஏபிடிII,டெல்பி-சி3, சீட்ஸ்-2, காம்பஸ்-1, ஆசாட்-II ஆகிய செயற்கைக்கோள்கள் பி.எஸ்.எல்.வி.-சிஏ சி9 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டன.

2009

2009

2009ம் ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி பி.எஸ்.எல்.வி.-சிஏ சி12 ராக்கெட் மூலம் ரிசாட்-2, அனுசாட் ஆகிய செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன.

2009

2009

2009ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி பி.எஸ்.எல்.வி.-சிஏ சி14 ராக்கெட் ஓஷன்சாட்-2, ரூபின் 9.1, ரூபின் 9.2, ஸ்விஸ்க்.யூப்-1, பீசாட், யூடபுள்யூஇ-2, ஐடிஅப்சாட்-1 ஆகிய செயற்கைக்கோள்களை தாங்கிச் சென்றது.

2010

2010

2010ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி பி.எஸ்.எல்.வி.-சிஏ சி15 ராக்கெட் கார்டோசாட் -2பி, ஐஸ்சாட்-1, டிஎல்சாட்-1, ஸ்டட்சாட் ஆகிய செயற்கோள்களை விண்ணிற்கு தாங்கிச் சென்றது.

2011

2011

2011ம் ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி பி.எஸ்.எல்.வி.-சி16 ராக்கெட் ரிசோர்ஸ்சாட்-2, எக்ஸ்சாட், யூத்சாட் ஆகிய செயற்கோள்களை விண்ணிற்கு தாங்கிச் சென்றது.

2011

2011

2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ம் தேதி மெகா-டிராபிக்ஸ், எஸ்ஆர்எம்சாட், ஜுக்னு, வெசல்சாட்-1 ஆகிய செயற்கைக்கோள்கள் பி.எஸ்.எல்.வி.-சிஏ சி18 ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டன.

2012

2012

2012ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி ஸ்பாட்-6, ப்ராய்டெரஸ், எம்ரெசின்ஸ் ஆகிய செயற்கைக்கோள்கள் பி.எஸ்.எல்.வி.-சிஏ சி21 ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டன.

2013

2013

2013ம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி சாரால், சபையர், நியோஸ்ஸாட், டக்சாட்-1, யூனிபிரைட்-1, ஸ்ட்ராண்ட்-1, ஆசாட்-3 ஆகிய செயற்கைக்கோள்கள் பி.எஸ்.எல்.வி.-சிஏ சி20 ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டன.

2014

2014

2014ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதி ஸ்பாட்-7, கான்-எக்ஸ்4, எக்ஸ்5, ஐசாட், வெலாக்ஸ் 1 ஆகிய செயற்கைக்கோள்கள் பி.எஸ்.எல்.வி.-சிஏ சி23 ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டன.

English summary
Above is the list of multi satellite launches by PSLV rockets.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X