For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ100 கோடி மதிப்பீட்டில் கிண்டியில் அடுக்குமாடி தொழில் வளாகம்: சட்டசபையில் ஜெ. அறிவிப்பு

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: கிண்டி தொழிற்பேட்டையில் ரூ100 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி தொழில் வளாகம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டசபையில் 110-வது விதியின்கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று தாக்கல் செய்த அறிக்கை:

தன்னம்பிக்கையுடன் ஒவ்வொரு மனிதனும் வாழ வகை செய்வதும், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கக் கூடியதுமான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை ஊக்குவித்து, சிறு முதலீட்டாளர்களின் நண்பனாக எனது தலைமை யிலான அரசு செயல்பட்டு வருகிறது.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை மேம்படுத்து வகையில், பின்வரும் அறி விப்புகளை இந்த மாமன் றத்தில் அறிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

முதன்மை மாநிலம்

முதன்மை மாநிலம்

அரசின் தொலை நோக்கு கொள்கைகள் மற்றும் மக்களின் தொழில் புரியும் ஆவலான மனநிலை ஆகியவை மாநிலத்தில் மிகப் பெரிய அளவில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைவதற்கு அடித்தளமாக அமைந்துள்ளன. 67,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகளைக் கொண்ட, பதிவு செய்யப்பட்ட 11 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அதிகபட்சமாக 60 லட்சம் நபர்களுக்கு மேல் வேலைவாய்ப்பினை வழங்கி; தமிழ் நாட்டை இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் முதன்மை மாநிலமாக விளங்கச் செய்துள்ளது.

ஆசியாவின் தொழில்நிறுவன தலைநகர்

ஆசியாவின் தொழில்நிறுவன தலைநகர்

தமிழ்நாட்டினை ஆசியாவின், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தலைநகரமாக உருவாக்கிட, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங் களுக்கான, புதிய தொழிற் கொள்கை உருவாக்கப்படும். இந்தப் புதிய கொள்கை யானது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் எதிர் கொண்டு வரும் சவால் களுக்கு தீர்வு காண்ப தோடு அல்லாமல், தொலை நோக்கு பார்வை 2023-ன் குறிக்கோளினை எளிதாக அடையவும் வழி வகுக்கும்.

புதிய ஆய்வு

புதிய ஆய்வு

மேலும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஏற்கெனவே உயர் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், இத்துறையின் உலக அளவிலான போட்டித் திறனை அதிகரிக்கும் வகையில் துறை சார்ந்த பன் னாட்டு அளவிலான ஆய்வு மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் உள்ள குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தற்போதைய போட்டித் திறனை மதிப்பிட்டு உலக அளவில் செயல்பட்டு வரும் இத்தகைய தொழில் நிறுவனங்களின், போட்டி திறனுடன் ஒப்பிட்டு சிறந்த நிலை அடைய இந்த ஆய்வு பயன்படும்.

அடுக்குமாடி தொழில் வளாகம்

அடுக்குமாடி தொழில் வளாகம்

1958-ஆம் ஆண்டில் கிண்டி தொழிற்பேட்டை முதன்முதலாக தமிழக அரசால் சென்னை நகரின் மையப் பகுதியில் உருவாக்கப் பட்டது. இத்தொழிற்பேட்டையில் கிடைமட்ட விரிவாக்கத்திற்கான நிலம் பற்றாக்குறையாக இருப்பதால், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவி செய்வதற்கும்;

மேலும் கிண்டி தொழிற்பேட்டையில் ஏற்கெனவே இயங்கி வரும் நிறுவனங்களின் விடுபட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்கும்; அடுக்குமாடி தொழில் வளாகம் ஏற்படுத்தித் தருவது அவசியமாகிறது.

ரூ100 கோடியில்...

ரூ100 கோடியில்...

எனவே, கிண்டி தொழிற் பேட்டையில் ஓர் அடுக்குமாடி தொழில் வளாகம் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறி உள்ளார்.

English summary
Tamil Nadu Chief Minister J. Jayalalithaa today said her government will come out with a new policy for the growth of micro, small and medium enterprises (MSME). She also told the assembly that a multi-storied industrial complex would be built here at an outlay of Rs.100 crore to house such units.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X