குழந்தையை பள்ளிக்கு விட வந்த நபர் வெட்டிக்கொலை.. சென்னை, அடையாறு பகுதியில் பரபரப்பு

சென்னை: அடையாறு பகுதியில், பள்ளி அருகே ஒரு நபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, அடையாறு, இந்திராநகர் பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகே இன்று காலை இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது..

தனது பிள்ளையை பள்ளிக்கு அழைத்து வந்த சுரேஷ் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு, அவர் திரும்பியபோது, அவரை பள்ளி அருகே ஒரு கும்பல் வழிமறித்தது.
ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்த அந்த கும்பல், கண் இமைக்கும் நேரத்தில், சுரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்து சரிந்தபோது, அங்கிருந்து அந்த கும்பல் தப்பியோடிவிட்டது. சுரேஷ் அதே இடத்தில் பலியானார்.
காலை நேரத்தில் பரபரப்பாக இயங்கும் ஒரு பள்ளி அருகே இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சுரேஷின் பின்னணி என்ன என்பது குறித்த தகவல்களை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!