இருந்தாலும் சிலம்புவுக்கு இவ்வளவு கோபம் ஆகாது.. மட்டன் வெட்டும் கத்தியை எடுத்து.. சரமாரி வெட்டு!
காதலியின் அப்பாவை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொன்றுவிட்டார்
செங்கல்பட்டு: இருந்தாலும் கறிக்கடைக்காரர் சிலம்புவுக்கு இவ்வளவு கோபம் ஆகாது.. மட்டன் வெட்டும் கத்தியாலேயே காதலியின் அப்பாவை சரமாரியாக வெட்டி தள்ளி கொன்றே விட்டார்!
செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தணிகைமணி.. 42 வயதாகிறது.. ஒரு பிரைவேட் ஸ்கூலில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார்... இவரது மனைவி பெயர் காயத்திரி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

மகள் பெயர் கீர்த்திகா.. காலேஜ் படிக்கிறார்.. இவரை சிலம்பு என்ற இளைஞர் காதலித்து வந்தார்.. சிலம்பு அதே பகுதியில் ஒரு கறிகடையில் வேலை பார்க்கிறார்.. இத ஒரு தலைக்காதல்.. கீர்த்தனாவை பார்க்கும்போதெல்லாம் தன் லவ்வை சொல்லி, தினமும் டார்ச்சர் தந்துள்ளார்.
இதனால் பொறுத்து பொறுத்து பார்த்த கீர்த்தனா, தன் அப்பாவிடம் இதை சொல்லிவிட்டார். இதனால், ஆத்திரமடைந்த தணிகைமணி, சிலம்பை நேரில் சந்தித்து, இதை பற்றி கேட்டார்.. அப்போது 2 பேருக்கும் தகராறு முற்றிவிட்டது.. ஒரு கட்டத்தில் சிலம்புவின் கன்னத்தில் பளார் என அறைவிட்டார் தணிகைமணி.
அப்போதிருந்து இந்த விரோதம் இன்னும் அதிகமாகிவிட்டது.. அதனால், தணிகைமணியை கொல்ல முடிவு செய்தார் கறிக்கடைகாரர் சிலம்பு.. தன் நண்பர்கள் விஜி, அக்கு ஆகியோரை துணைக்கு அழைத்தார். இந்நிலையில், நேற்று செங்கல்பட்டில் இருந்து பைக்கில் வீட்டுக்கு தணிகைமணி சென்று கொண்டிருந்தார்.
இருங்குன்றபள்ளி அருகே சென்றபோது, அங்குதான் சிலம்புவும் அவரது நண்பர்களும் ஒளிந்து கொண்டிருந்தனர்... பைக்கில் இவர் வருவதை பார்த்ததுமே 3 பேரும், அவரை மறித்து, கறி வெட்டும் கத்தியால் தணிகைமணியை சரமாரியாக வெட்டினர்... இதில், தணிகைமணி ரத்த வெளள்ளத்தில்சுருண்டு விழுந்தார்.
பிறகு அந்த கும்பல் தப்பிவிட்டது. தகவலறிந்து செங்கல்பட்டு தாலூகா போலீசார் தணிகைமணியை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.. ஆனாலும் தணிகைமணியை காப்பாற்ற முடியவில்லை.. தற்போது தலைமறைவாகிவிட்ட கறிக்கடை சிலம்பு, நண்பர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
கடலூரில் முகம் சிதைத்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்.. கொலையாளி யார்? போலீஸ் தீவிரம் -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications