விரைவில் கருணாநிதி பேசுவார் எழுதுவார்.... நேரில் சந்தித்த முத்தரசன் நம்பிக்கை!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  விரைவில் கருணாநிதி பேசுவார் எழுதுவார்.... முத்தரசன் நம்பிக்கை!

  சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் மிகப் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவில் அவர் பேசவும், எழுதவும் அளவுக்கு முன்னேற்றமடைவார் என்று இந்திய கம்யூ., மாநிலச் செயலர் முத்தரசன் நம்பிக்கை தெரிவித்தார்.

  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன், திமுக தலைவர் கருணாநிதியை இன்று சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார்.

  mutharasan meets Karunanidhi

  பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

  கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க வந்தேன், அவரது உடல் நலம் முன்பை விட சிறப்பாக உள்ளது.

  திமுக தலைவர் கருணாநிதி என்னையும், என்னுடன் வந்தவர்களையும் அடையாளம் கண்டு கொண்டார்.

  அவருடைய உடல்நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

  அவரது உடல்நிலை விரைவில் முன்னேற்றமடைந்து பேசவும், எழுதவும் வேண்டும் என்று விரும்புகிறேன். அது நடக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Mutharasan hopes dmk chief karunanidhi will start speak and writing.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற