நாடா புயல் அவசர உதவிக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்.. தமிழக அரசு அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடா புயல் குறித்த தகவல்களை பெறவும், அவசர உதவி கோரவும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் விதமாக 1070, 1077 என்ற கட்டணமில்லா தொடர்பு எண்களை தமிழக அரசு அறிவுறித்தியுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள நடா புயல் கடலூருக்கு அருகில் டிசம்பர் 2-இல் கரையைக் கடக்கும் என்று கருதப்படுகிறது. இந்த புயலால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Nada Cyclone Emercency Toll Free nos Announced by Tamilnadu Govt

தனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாள்களும் விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், அண்ணா பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், சட்டப் பல்கலைக்கழகமும் இன்று வியாழக்கிழமை (டிச.1) நடைபெறவிருந்த தேர்வுகளை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

ுயல் எச்சரிக்கையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. உஷார் நிலையில் இருக்குமாறும், தாழ்வான பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுரை அளிக்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதையடுத்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வரும் மாவட்ட நிர்வாகம், நிவாரண முகாம்களுக்கு சென்று மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுரை வழங்கி வருகிறது.

இந்நிலையில், 'நாடா' புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள தொலைபேசி, வாட்சப் எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் வெளியிடப்பட்டுள்ளன.

சென்னை மக்கள் அவசர உதவி பெற 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை மாநகராட்சி நிர்வாகம் அமைத்துள்ளது. 044 - 25619206, 25619511 ஆகிய தொலைபேசி எண்களில் உதவிக்கு அழைக்கலாம் என்று மாநகராட்சியின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 9445477207, 9445477203 ஆகிய வாட்ஸ்அப் எண்களிலும் பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், gccdm1@chennaicorporatio.gov.in, gccdm2@chennaicorporatio.gov.in, gccdm3@chennaicorporatio.gov.in, gccdm4@chennaicorporatio.gov.in, gccdm5@chennaicorporatio, gov.in ஆகிய மின்னஞ்சல் முகவரிகள் வழியாகவும் இடையூறுகள் குறித்த தகவல்களை அளிக்கலாம்.

இதுபோன்று, கடலூர், புதுச்சேரி நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 1070, 1077 என்ற கட்டணமில்லா எண்ணில் தங்களுக்கு தேவையான உதவிகளை கோரலாம். திருவள்ளூரில் 1070, 1077 என்ற எண்ணிலும் 044 - 27664177 என்ற எண்ணிலும் 24 மணி நேரமும் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chennai: Nada Cyclone Emercency Toll Free nos Announced by Tamilnadu Govt to the people they can contact anytime get information about cyclone and also received relief.நடா புயல் குறித்த தகவல்களை பெறவும், அவசர உதவி கோரவும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் விதமாக 1070, 1077 என்ற கட்டணமில்லா தொடர்பு எண்களை தமிழக அரசு அறிவுறித்தியுள்ளது.நடா புயல் குறித்த தகவல்களை பெறவும், அவசர உதவி கோரவும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் விதமாக 1070, 1077 என்ற கட்டணமில்லா தொடர்பு எண்களை தமிழக அரசு அறிவுறித்தியுள்ளது.
Please Wait while comments are loading...