நாகையில் நீடிக்கும் கனமழை... காரைக்கால் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம் : நாகை மாவட்டத்தில் பரவலாக கனமழை நீடித்து வருகிறது. காரைக்காலில் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை தொடக்கம் முதலே நாகப்பட்டினம் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இன்றும் நாகை மாவட்டம் கீழ்வேளூர், கீழையூர், திட்டச்சேரி, வேளாங்கண்ணியில் கனமழை பெய்து வருகிறது.

Nagapattinam today too get severe rain, flood alert given to Karaikal lowlying area people.

இதே போன்று தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பாபநாசத்திலும் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக 6 குடிசை வீடுகள் இடிந்து விழுந்து சேதமாகியுள்ளன.

காரைக்காலில் அரசலாறும், திருமலை ராஜன் கால்வாய், கூவம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக மக்கள் பாதுகாப்புடன் இருக்க மாவட்ட ஆட்சியர் கேசவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Flood alert given by district of Karaikal as water inflow is high at rivers and today too Nagapattinam receives heavy rainfall.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற