For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. சிகிச்சை தகவல்களில் உண்மை மறைக்கப்படுகிறது 50%- உண்மை உள்ளது 27%... இது நக்கீரன் சர்வே

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை தகவல்களில் உண்மை மறைக்கப்படுவதாக 50% பேரும் உண்மை உள்ளது என 27% பேரும் நக்கீரன் இதழ் நடத்திய கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து தமிழகம் முழுவதும் 10,000 பேரிடம் நக்கீரன் இதழ் பல கேள்விகளுடன் கருத்து கணிப்பு நடத்தியுள்ளது. இந்த கருத்து கணிப்பு முடிவுகளை நக்கீரன் இதழ் வெளியிட்டுள்ளது.

உண்மை மறைப்பு

உண்மை மறைப்பு

இதில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை தகவல்களில் உண்மை மறைக்கப்படுவதாக 50% பேர் கூறியுள்ளனர். அதே நேரத்தில் அந்த தகவல்களில் உண்மை உள்ளது 27% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இதில் பொய்தான் இருக்கிறது 23% பேர் கூறியுள்ளனர்.

அதிமுக பலவீனம்

அதிமுக பலவீனம்

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை பாதிப்பு அதிமுகவை பலவீனப்படுத்தும் என 46% பேர் கூறியுள்ளனர். அதிமுகவில் மாற்றம் இருக்காது என 25%; அதிமுகவுக்கு அனுதாப அலை வீசுகிறது என 29% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அரசியல் கட்சிகள்...

அரசியல் கட்சிகள்...

ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மற்ற அரசியல் கட்சியினர் காட்டும் அக்கறை வெறும் விளம்பரம்தான் என 45% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இதில் உண்மை இருக்கிறது என 24%; போலியானதுதான் என 31% பேர் கூறியுள்ளனர்.

நாடகம்

நாடகம்

மேலும் அப்பல்லோ மருத்துவமனையில் நடப்பதெல்லாம் வெறும் நாடகம் என 17% மக்கள் கருத்து தெரிவித்துள்ளதாக சொல்கிறது நக்கீரன் சர்வே.

English summary
According to Nakkhheeran Survey 50% people not believe the medical reports on TN CM Jayalalithaa's health.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X