போராட்டம்.. நாமக்கல் ஆசிரியர்கள் 2,210 பேரிடம் விளக்கம் கேட்டு கல்வி அதிகாரி நோட்டீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நாமக்கல் : நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து விளக்கமளிக்குமாறு நாமக்கல் மாவட்டத்தில் 2,210 ஆசிரியர்களுக்கு கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, 7 வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வரகின்றனர். அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

Namakkal district education officer issued notice to 2,210 teachers

எனினும் தடையை மீறி மாவட்டத்தின் பல பகுதிகளில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒரு பிரிவைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நாமக்கலில் போராட்டத்தில் ஈடுபட்ட 2,210 பேரிடம் விளக்கம் கேட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Namakkal District Education officer issued notice to 2,210 Teachers fro protesting against Madurai Highcourt bench order.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற