நாஞ்சில் சம்பத்தும்... நயன்தாராவும்!
சென்னை: என் தலைவர் கட்டளையிட்டால்.... நயன்தாராவில் குளிக்கச் சொன்னாலும் குளிப்போம்.... சே சே... நயக்கராவில் குளிக்கச் சொன்னாலும் குளிப்போம்... நயன்தாராவை இழுத்து வரச் சொன்னாலும் இழுத்து வருவோம்... என்ன இது என்கிறீர்களா? இது நாஞ்சில் சம்பத்தின் டங்க் சிலிப் பேச்சு.
மதிமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தவர் நாஞ்சில் சம்பத். மடை திறந்த வெள்ளம்போல் தமிழ் மொழியை பேசும் வல்லவர்களில் நாஞ்சில் சம்பத்தும் ஒருவர்.
எதுகை, மோனை கலந்து அடுக்கு மொழியுடன் பேசும் ஆற்றல் படைத்தவர் நாஞ்சில் சம்பத். கம்பராமாயணம் தொடங்கி கலிஃபோர்னியா நிலவரம் வரை சரளமாக பேசக்கூடியவர்.
யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல இத்தனை திறமை வாய்ந்த நாஞ்சில் சம்பத்தும், சற்றே டங்க் சிலிப் ஆகியுள்ளார்.
நயக்கராவும் நயன்தாராவும் அவர் நாவில் நடனமாடியது இப்போது வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நாஞ்சில் சம்பத் காரில் பயணித்தபடி பேசுகிறார். அப்போது என் தலைவர் கட்டளையிட்டால், "நயன் தாராவில் குளிக்கச் சொன்னாலும் குளிப்போம்.." என்று பேசுகிறார். பின்னர் சுதாரித்து... நயக்கராவில் குளிக்கச் சொன்னாலும் குளிப்போம்... நயன்தாராவை இழுத்து வரச் சொன்னாலும் இழுத்து வருவோம்...
மதிமுகவில் இருந்த போது சம்பத்துடன் காரில் சென்றவர் தனது செல்போனில் எடுத்த வீடியோ என்கிறார்கள். நயன்தாரா நினைப்பிலேயே இருந்தார். அதனால்தான் நயகாராவுக்குப் பதிலாக நயன்தாரா என்கிறார் என்று நெட்டிசன்கள் நாஞ்சில் சம்பத்தைக் கலாய்க்கிறார்கள்.
மழை வெள்ளம் குறித்த பேட்டியினால் அதிமுகவில் வகித்த அத்தனை பதவிகளையும் இழந்தார் நாஞ்சில் சம்பத். தற்போது தான் செய்தி தொடர்பாளர் பதவியை பெற்றிருக்கிறார். அதற்கும் ஆப்பு வைக்க நினைப்பவர்கள் தான் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாகவும் கூறுகின்றனர் இதுகுறித்த விவரம் அறிந்தவர்கள்.
நயன்தாரா என்றால் நாஞ்சில் சம்பத்திற்கு கூட இழுத்து வர விரும்பம்தான் போல... நயன்தாரா என்ன சொல்லப் போகிறாரோ?
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications