கமல் ஏன் கருத்து சொல்லி மாட்டிக் கொள்ள வேண்டும்? கேட்கிறார் நாஞ்சில் சம்பத்
நடிகர் கமல்ஹாசன் கருத்து சொல்லி ஏன் மாட்டிக்கொள்ள வேண்டும் என்று நாஞ்சில் சம்பத் கேட்டுள்ளார்.
சென்னை: நடிகர் கமல்ஹாசன் கலைத்துறையில் நீண்ட பயணம் செல்லக் கூடியவர் என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். அவர் கருத்துக்களை கூறி மாட்டிக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஊழல் மலிந்துள்ளதாக கூறிய கமல்ஹாசன் பலரின் ஆதரவையும் எதிர்ப்பையும் பெற்று வருகிறார். அமைச்சர்கள் ஒருமையில் பேசுவதோடு வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

இதனிடையே கமல்ஹாசனுக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ள தினகரன் அணியை சேர்ந்த நாஞ்சில் சம்பத், கமலை ஒருமையில் பேசுவதும், வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் மிரட்டக்கூடாது என்று கூறினார்.
தமிழ்த்திரை உலகிற்கு உலக அரங்கில் அங்கீகாரம் கிடைக்கும் எனில் அது கமலால் மட்டுமே முடியும். அவல் எங்கே கிடைக்கிறது என ஸ்டாலின் ஏங்கும் போது கமல் சர்ச்சையில் சிக்கிக்கொள்கிறார். ஊழல் நடக்கிறது என்று மட்டும் சொல்லாமல் யார் செய்கிறார்கள் என்பதையும் கமல் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றும் கூறினார்.
கலைத்துறையில் நீண்ட பயணம் செய்யக்கூடிய நடிகர் கமல்ஹாசன் கருத்து சொல்லி ஏன் மாட்டிக்கொள்ள வேண்டும் கேரளா, கர்நாடகாவில் இப்படி சொல்லமாட்டார்களா என்று கேட்டுள்ள நாஞ்சில் சம்பத், தமிழ் கலாசாரத்துக்கு எதிராக 'இந்து' அமைப்பு எப்படி போராட வேண்டும்? என்றும் நாஞ்சில் சம்பத் கேட்டுள்ளார்.
அர்ஜூன் சம்பத் விளம்பரத்துக்காக செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார் நாஞ்சில் சம்பத். கடந்த சில நாட்களாகவே நாஞ்சில் சம்பத், நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவாகவே பேசி வருகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், ஊடகங்களின் படையெடுப்பால் நோஞ்சான்கள் எல்லாம் வருகிறார்கள் என்றார்.
நமது எம்ஜிஆரில் எடப்பாடி பழனிச்சாமி இருட்டடிப்பு செய்யப்படவில்லை என்றும் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களாகவே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பற்றிய செய்திகளும், அமைச்சர்கள் பேச்சு, சட்டசபை நிகழ்ச்சிகளைப் பற்றிய செய்திகளை வெளியிடுவதில்லை. ஆனால் எடப்பாடி பழனிச்சாமியை இருட்டடிப்பு செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications