நன்றி மறந்த ஜெயக்குமார்... தினகரனை அலட்சியப்படுத்துவதா? - நாஞ்சில் சம்பத் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்திக்க நாடு முழுவதும் இருந்து மக்கள் வந்துகொண்டே இருக்கின்றனர் என தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் நன்றி மறந்தவர் என்றும் சாடியுள்ளார்.

சென்னையில் தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஓபிஎஸ் இருக்கும் இடைத்தை நாடி யாரும் செல்வது இல்லை. அதேபோல், ஓபிஎஸ் நடத்தும் கூட்டங்களுக்கு வந்த மக்களே திரும்பத் திரும்ப ஷிப்ட் முறையில் வந்து செல்கின்றனர்.

Nanjil Sampath supports TTV Dinakaran to the extreme

ஆனால் டிடிவி தினகரனை சந்திக்க எந்த அழைப்பும் இன்றி, தினமும் நாடு முழுவதும் இருந்து தொண்டர்கள் வந்து செல்கின்றனர். அமைச்சர் ஜெயக்குமாருக்கு அதிகாரம், கண்ணை மறைக்கிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ஜெயக்குமாருக்கு எந்தப் பதவியும் வாங்கமல் இருந்த போது அவரை மீனவ அணி செயலாளராக்கி அழகு பார்த்தார் சசிகலா.

டிடிவி தினகரன் அவருக்கு நிதியமைச்சர் பதவி கொடுத்தார். ஆனால், நன்றி இல்லாமல் நாகரீகமற்ற முறையில் ஜெயக்குமார் நடந்து கொள்கிறார். தினகரனை அலட்சியப்படுத்துகிறார். நான் டிடிவி தினகரன் ஆதரவாளர் தான் என்று நாஞ்சில் சம்பத் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dinkaran supporter Nanjil Sampath told that every day lot of party cadres came to meet Dinakaran with out any invitation.
Please Wait while comments are loading...