குடியரசு தலைவர் தேர்தல்.. எடப்பாடி பழனிச்சாமிக்கு போன் போட்டு ஆதரவு கேட்ட மோடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் போனில் ஆதரவு கேட்டுள்ளார் பிரதமர் மோடி.

பாஜகவின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். பீகார் ஆளுநராக உள்ள இவர் பாஜகவின் தலித் இன தலைவர்களில் ஒருவராகும். இவரை வேட்பாளராக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அறிவித்த சில நிமிடங்களிலேயே அவருக்கு ஆதரவு திரட்ட ஆரம்பித்தார் பிரதமர் மோடி.

NarendraModi has requested the TamilNadu Chief Minister to support BJP presidential candidate

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பிரதமர் ஆதரவு கேட்டுள்ளார். பீகார் முதல்வர் நிதிஷ்குமாரிடமும் ஆதரவு கேட்டார் மோடி. அதேபோல காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிடமும் ஆதரவு கேட்டார் மோடி.

எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசு தலைவர் வேட்பாளரை தேர்ந்தெடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இக்குழுவில் அதிமுகவை சேர்ந்தவர்கள் இடம்பிடிக்கவில்லை.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Prime Minister NarendraModi has requested the TamilNadu ChiefMinister Edappadi Palanicachim to support BJP presidential candidate.
Please Wait while comments are loading...