• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திரைமறைவில் இருந்தபடி, தமிழக அரசியலை ஆட்டிப்படைத்த நடராஜன் - பகுதி 4

By R Mani
|
  நடராசனின் இன்றைய நிலைமை நமக்கு உணர்த்தும் பாடம் - பகுதி 4- வீடியோ

  - ஆர். மணி

  சென்னை: அரசியல் சாசனத்திற்கு அப்பாற்பட்ட சக்தியாக செயல்பட்டவர் நடராஜன். ஆனால், அதை அம்பலப்படுத்துவதில் தமிழக ஊடகங்கள் மென்மையான போக்கைதான் கொண்டிருந்தன.

  சசிகலா வெளியே பெரும்பாலானோருக்கு, தெரிந்தபடி இதை செய்ததாக கருதலாம். ஆனால், நடராஜன் மறைமுமாக திரைமறைவில் இதை செய்தார். ஜெயலலிதாவின் அரசியல் வெற்றிக்கு பின்னால் இருந்த நடராஜனை தீவிர கண்காணிப்பிலேயே வைத்திருந்ததும் ஜெயலலிதாதான்.

  அனைத்து கட்சி தலைவர்களுடனும் நல்ல உறவில் இருந்த நடராஜன் பற்றி தமிழக மக்களுக்கு பெரிதாக தெரியாமல் போக மீடியாக்களின் மென்மையான அணுகுமுறைதான் காரணம்.

  ஜெ.வின் இன்னொரு பக்கம்

  ஜெ.வின் இன்னொரு பக்கம்

  அரசியல் ரீதியில் நடராசன் ஒரு அங்குலம் கூட முன்னேறுவதை ஜெ விரும்பியது கிடையாது. ஜெ உயிருடன் இருந்த வரையில் 24 மணி நேரமும் நடராசன் எங்கள் கண்காணிப்பில் தான் இருந்தார். இதில் எங்களது நடவடிக்கைகள் ஒழுங்காக இருக்கிறதா, எங்களில் யாராவது தனிப்பட்ட முறையில் நடராசனுக்கு நெருக்கமாக செல்ல முயற்சிக்கின்றனரா என்று அறியவும், ஒரு குழு இயங்கிக் கொண்டிருந்தது. இதனை வைத்தே ஜெ - நடராசன் விவகாரத்தின் முழு பரிமாணத்தை நீங்கள் இப்போது புரிந்து கொள்ளலாம்'' என்கிறார் ஓய்வு பெற்ற காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர். ‘'ஏனெனில் எந்த நேரமும் நடராசன் தன்னுடைய அரசை கவிழ்த்து விடுவார், தன்னுடைய விஸ்வாசமான எம்எல்ஏ க்களையும் கூட தன்னிடம் இழுத்துக் கொள்ளுவார் என்ற வலுவான எண்ணம் ஜெ விடம் இருந்தது. இதனை நான் இப்படி சொல்லுகிறேன், நடராசனின் அரசியல் நடவடிக்கைகளை பொறுத்த வரையில் அவை வளர ஜெ ஒருபோதும் அனுமதித்தில்லை. ஆங்கிலத்தில் சொல்லுவது என்றால், ‘'Jayalalithaa will not allow even a blade of a grass to grow at her feet", அதாவது, தனக்கு போட்டியாக ஒரு அங்குல அளவுக்கு கூட அரசியல் அபிலாஷைகள் நடராசனுக்கு எந்த கட்டத்திலும் வந்து விடக் கூடாது என்பதில் ஜெ உறுதியாக, அவருடைய இறுதி காலம் வரையில் இருந்தார். இதுதான் ஜெ - நடராசன் உறவின் ரகசியம்'' என்று மேலும் கூறுகிறார் அந்த அதிகாரி.

  மறைந்தார் நடராஜன்

  மறைந்தார் நடராஜன்

  ஜெ வின பூத உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி வந்த போது நடராசனை, மோடிக்கு, தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் அறிமுகம் செய்து வைத்தார். எல்லா கட்சிகளிலும் நண்பர்களை வைத்திருந்தார் நடராசன். வெளிநாட்டிலிருந்து ஒரு காரை இறக்குமதி செய்த 20 ஆண்டு கால வழக்கில் சமீபத்தில்தான், நடராசனுக்கு கீழமை நீதிமன்றம் கொடுத்த 2 ஆண்டு சிறைத் தண்டனையை, சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் உறுதி செய்திருந்தன. இந்த நிலையில்தான் மரணமடைந்துள்ளார் நடராசன். தமிழ் அரசி, புதிய பார்வை என்று இரண்டு பத்திரிகைகளையும் நடத்திக் கொண்டிருந்தார் நடராசன். சில மாதங்களுக்கு முன்பு நடராசனுக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் (liver) மாற்று அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. பின்னர் வீடு திரும்பினார். மார்ச் 16 ம் தேதி திடிரென்று அவரது உடல் நிலையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக குளோபல் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.

  தூதருக்கு அளித்த விருந்து

  தூதருக்கு அளித்த விருந்து

  நடராஜன் லைம்லைட்டில் இருந்தபோது நடந்த விஷயம் ஒன்றும் தற்போது தெரிய வந்துள்ளது. சென்னையில் உள்ள அந்த வல்லரசு நாட்டின் துணைத் தூதரகத்தின் தலைமை அதிகாரியுடன் நடராஜனுக்கு நல்ல நெருக்கம் இருந்ததாம். அவரை 10 முறை சந்தித்துள்ளாராம். நடராஜன் வீட்டில் வைத்து அவருக்கு தடபுடல் "விருந்தும்" தரப்பட்டுள்ளதாம். இதை உளவுத்துறை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்துகிறார். ‘'நடராசன் தீவிரமான இருதய நோய்த் தொற்றுக் காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாகவும், அவருக்கு ‘'வெண்டிலேட்டர் பொருத்தப் பட்டிருப்பதாகவும், அவரது உடல் நிலைமை மிகவும் மோசமாக (critical) இருப்பதாகவும்'' குளோபல் மருத்துவமனை தன்னுடைய 18 ம் தேதி வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவித்தது. இந்த நிலையில், நடராஜன் உயிர் பிரிந்ததாக இன்று அதிகாலை அறிவிக்கப்பட்டது.

  ஜெ.வைப் பிடிக்காதவர்களுடன் நெருக்கம்

  ஜெ.வைப் பிடிக்காதவர்களுடன் நெருக்கம்

  ஜெ வின் ஜென்ம விரோதியான, தற்போதய பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமியுடன் நடராசன் எப்போதும் தொடர்பில் இருந்து கொண்டுதான் இருந்திருக்கிறார். இது போன்று பலரும் தொடர்பில் இருந்திருக்கிறார்கள். இதுதான், எந்தக் கட்டத்திலும் நடராசனை மீண்டும் சேர்த்துக் கொள்ள ஜெயலலிதா மறுத்து விட்டதன் பின்னணி. ஆராயப் பட வேண்டிய மனிதரான நடராசனை, அவருடைய உண்மையான குணாம்சங்களின் பின்னணியில் வைத்துப் எடை போட வேண்டிய அளவுக்கு தமிழகத்தின் ஊடகங்கள் எடை போடவில்லை, என்று தான் கூற வேண்டும். ஏன் இதனை நாம் கூற வேண்டியிருக்கிறது என்றால், சசிகலாவுக்கு இணையாக நடராசனும் ஒரு அரசியல் சாசனத்திற்கு அப்பாற்பட்ட சக்தியாகத்தான் (Extra Constitutional Authority) கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வந்திருக்கிறார். இதில் சசிகலாவின் நடவடிக்கைகள் வெளிப்படையாக இருந்தன ... நடராசனின் நடவடிக்கைகள் திரை மறைவில் நடந்தன.... அதுதான் வித்தியாசம்.

  எந்த மாநிலத்திலும் இல்லாத கேலிக்கூத்து

  எந்த மாநிலத்திலும் இல்லாத கேலிக்கூத்து

  இந்த கேலிக்கூத்து வேறெந்த மாநிலத்திலும் நடந்தது இல்லை....இந்தளவுக்கு Extra Constitutional Authority யாக கருதப்பட்டவர்கள் மீடியா வின் பார்வையில் கிட்டத்தட்ட மென்மையாகத் தான் அணுகப்பட்டார்கள். ஒரு விதத்தில் பார்த்தால், நடிகர் மற்றும் அரசியல் வாதியான விஜயகாந்த் மீடியாக்களுக்கு எதிராக செய்த ‘'ஒரு காரியம்'' நியாயமானது தான் என்றே புரிந்து கொள்ள முடிகிறது. இந்த விஷயம் பற்றிய ஒரு தொலைகாட்சி விவாதத்தில் பேசிய, சமீபத்தில் காலமான, பத்திரிகையாளர் ஞாநி, விஜயகாந்த்தின் செய்கையை பாரதியின் வரிகளை மேற்கோள் காட்டி விஜயகாந்த் செய்ததில் எந்த தவறும் இல்லை என்றார்; ‘'பாதகம் செய்பவர்களை கண்டால் நீ பயங்கொள்ளல் ஆகாது பாப்பா, மோதி மிதித்து விடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா'' என்று பாரதி கூறினார். ஞாநி இறந்து போய் விட்டார்.ஆனால் அவர் மேற்கோள் காட்டிய பாரதியின் வரிகள் இன்றைக்கும் நியாயமானது தான் என்பதே நடராசனின் இன்றைய நிலைமை நமக்கு உணர்த்தும் பாடமாகும்.

  [பகுதி 1, 2, 3, 4]

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Tamilnadu medias never expose Natarajan who was played like a Extra Constitutional Authority in the politics.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more