கடைசி ஆளாக வந்து வாக்குப்பதிவு எந்திரத்தை வணங்கி வாக்களித்த நத்தம் விஸ்வநாதன்
திண்டுக்கல்: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வாக்குப்பதிவு முடியும் வேளையில் கடைசி ஆளாக வந்து வாக்குப்பதிவு எந்திரத்தை வணங்கிவிட்டு வாக்களித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் திங்கட்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் போட்டியிட்டார்.

அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் காலையிலேயே வாக்களித்து தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். ஆனால் நத்தம் விஸ்வநாதன் மட்டும் வாக்களிக்க வரவில்லை.
அமைச்சர் வாக்களிக்க வரவில்லையே என்று அனைவரும் நினைத்த வேளையில் வாக்குப்பதிவு நிறைவடைய 15 நிமிடங்கள் இருக்கையில் மாலை 5.45 மணிக்கு திண்டுக்கல்லில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்தார்.
வாக்குப்பதிவு எந்திரம் அருகே சென்ற அவர் அதை வணங்கிவிட்டு வாக்களித்தார். அவர் அங்கிருந்து கிளம்பிய வேகத்தில் வாக்குப்பதிவும் நிறைவடைந்தது.


Click it and Unblock the Notifications
