நக்சல் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் சங்கரின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி!
சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் சங்கரின் உடலுக்கு சொந்த ஊரில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை/விழுப்புரம்: சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் சங்கரின் உடல் இன்று மாலை அவருடைய சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள கொட்டச்செரு கிராமத்தில் சி. ஆர். பிஎஃப் வீரர்கள் நேற்று பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நக்சல்கள் திடீர் என்று தாக்குதல் நடத்தினர். இதில் 12 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

இத் தாக்குதலில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கழுமரம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்ற ராணுவ வீரரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே நக்சல் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் சங்கரின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் பழனிச்சாமி ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். இந்நிலையில் ராணுவ வீரர் சங்கரின் உடல் இன்று காலை தமிழகம் வந்தது.
பின்னர் சென்னையிலிருந்து சங்கரின் உடல் விழுப்புரம் கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து சங்கரின் உடல் அவரது சொந்த கிராமமான கழுமரம் கிராமத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கு பொதுமக்கள் சங்கரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து ராணுவ மரியாதையுடன் சங்கரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications