நெல்லை அருகே கார் விபத்துக்குள்ளானதில் இருட்டு கடை அல்வா உரி்மையாளரின் மகள் உட்பட 2 பேர் பலி
வத்தலகுண்டு அருகே கார் மரத்தில் மோதியதில் இருட்டு கடை அல்வா உரிமையாளர் மகள் உள்பட இருவர் பலியாகினர்.
நெல்லை: வத்தலகுண்டு அருகே கார் மரத்தில் மோதியதில் இருட்டு கடை அல்வா உரிமையாளர் மகள் உள்பட இருவர் பலியாகினர். படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் ஹரிபிரசாத். பெங்களூரு விமானப்படையில் பணிபுரிந்து வருகிறார். இவர் மனைவி இந்துராணி மற்றும் குடும்பத்தினருடன் காரில் பெங்களுருவில் இருந்து கேரளா நோக்கி வந்து கொண்டிருந்தார்.

காரை ஹரிபிரசாத் ஓட்டி வந்தார். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு மஞ்சளாற்று பாலம் அருகே வந்த போது திடீரென காரின் டயர் வெடித்தது. இதனால் கட்டுபாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மரத்தில் பயங்கரமாக மோதியது.
இதில் கார் முழுவதும் அப்பளம் போல் நொறுங்கி போனது. இதில் ஹரிபிரசாத்தின் மாமியார மோகனா, இளைய மகள் தனிஷ்கா ஸ்ரீ ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.
படுகாயம் அடைந்த ஹரிபிரசாத், அவரது மனைவி இந்துராணி முத்த மகள் அஞ்சனா ஆகியோர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வத்தலகுண்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான மோகனா நெல்லை இருட்டு கடை அல்வா உரிமையாளரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications