For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இத்தனை பேரா! அழகிரி பேரணியில் கூடிய கூட்டம் எவ்வளவு தெரியுமா?

மு.க அழகிரி நடத்தும் பேரணியில் எத்தனை பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    லட்சக்கணக்கானோர் எதிர்பார்க்கப்பட்ட அழகிரியின் பேரணிக்கு வந்தவர்கள் எத்தனை?- வீடியோ

    சென்னை: மு.க அழகிரி நடத்தும் பேரணியில் எத்தனை பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

    அழகிரி சென்னையில் தன்னுடைய பலத்தை நிரூபிக்கும் கட்டாயத்தில் தற்போது உள்ளார். திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதி நோக்கி மு.க அழகிரி நடத்தும் பேரணி தற்போது நடந்து வருகிறது.

    திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதியை மு.க அழகிரி தலைமையில் அவரது தொண்டர்கள் நடந்து செல்கிறார்கள். இன்னும் சில மணி நேரத்தில் அவர் சமாதியை அடைவார்கள்.

    எத்தனை போரை கூட்ட நினைத்தார்கள்

    எத்தனை போரை கூட்ட நினைத்தார்கள்

    முதலில் இந்த பேரணியில் 10 ஆயிரம் பேர் வரை திரட்டப்படுவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் அழகிரி இந்த எண்ணிக்கையை 1 லட்சமாக உயர்த்தினார். சென்னையில் 1 லட்சம் பேரை அழகிரி திரட்டி பேரணி நடத்த போகிறார் என்பதே, திமுக தரப்பிற்கு பெரிய கலக்கத்தை உண்டாக்கி இருந்தது. இதில் எல்லோரும் கருப்பு உடையில் வர வேண்டும் என்றும் உத்தரவு சென்றது.

    அழைத்து வந்தார்

    அழைத்து வந்தார்

    அதே போல அழகிரி தன்னுடைய ஆதரவாளர்களை மதுரையில் இருந்தும் மற்ற தென் மாவட்டங்களில் இருந்தும் களமிறங்கினார். இரவோடு இரவாக டிராவல்ஸ் பேருந்துகளை பிடித்து ஆட்களை அழைத்து வந்தார். நிறைய இளைஞர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

    மொத்தம் எத்தனை பேர்

    மொத்தம் எத்தனை பேர்

    ஆனால் மொத்தம் 7 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரை மட்டுமே இந்த பேரணியில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அழகிரி நினைத்ததை விட இது மிகவும் குறைவான கூட்டம் ஆகும். இதனால் பேரணியும் வேக வேகமாக நகர்கிறது. அதிகபட்சம் 10 ஆயிரம் பேர் இதில் கலந்து கொண்டிருக்க வாய்ப்புள்ளது.

    பெரிய ஏமாற்றம்

    பெரிய ஏமாற்றம்

    அழகிரி இதனால் ஏமாற்றம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தென் மாவட்டங்களில் இருந்து வந்த தொண்டர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டு உள்ளனர். சென்னை உள்ளிட்ட மற்ற வடமாவட்ட உறுப்பினர்கள் இதில் கலந்து கொள்ளவில்லை. இதனால் இதில் குறைவான கூட்டமே உள்ளது.

    கூகுள் புகைப்படம்

    கூகுள் புகைப்படம்

    இதுகுறித்து கூகுள் புகைப்படம் வெளியாகி உள்ளது. இதை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள பகுதியில் கருஞ்சிவப்பாக உள்ள இடத்தில்தான் பேரணி செல்கிறது. அங்குதான் கூட்டம் உள்ளது.

    English summary
    Nearly 10K supporters participated in Alagiri march.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X