குதிரை பேரம்.. விஜய் சொன்ன வார்த்தை.. ஜெர்க்கான தவெக வேட்பாளர்கள்.. பனையூரில் நடந்தது என்ன?
சென்னை: தவெக தலைவர் விஜய்க்கு அக்கட்சியின் வேட்பாளர்கள் ஆறுதல் கூறியுள்ள சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பனையூரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக மற்றும் அதிமுகவின் பணப்பட்டுவாடா தொடர்பாக விஜய் கவலையை வெளிப்படுத்தி இருக்கிறார். அதற்கு வேட்பாளர்கள், பணம் பெற்று கொண்டு வாக்காளர்கள் குடும்பம் குடும்பமாக வாக்களித்துள்ளதாக உற்சாகம் கொடுத்துள்ளனர்.
2 நாட்களுக்கு முன் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தவெக தலைவர் விஜய் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் 231 வேட்பாளர்களும் பங்கேற்று இருக்கின்றனர். முதற்கட்டமாக புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகிய இருவரும் வாக்குப்பதிவின் போது செய்ய வேண்டிய விஷயங்களை தெளிவாக கூறி இருக்கின்றனர்.

இதன்பின் 25 பேர் வீதம் வேட்பாளர்களை விஜய் தனியாக சந்தித்துள்ளனர். அப்போது விஜய் பேசுகையில், இது நமக்கு முதல் தேர்தல்.. அதிகார பலம், பண பலம் ஆகிய இரண்டையும் சமாளித்து களத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். ஒவ்வொருவரின் உழைப்பும் பாராட்டுக்குரியது என்று தெரிவித்துள்ளார். இருந்தாலும் தங்கள் மாவட்டத்திற்கு விஜய் பிரச்சாரம் வந்திருந்தால், களம் சாதகமாக மாறி இருக்கும் என்று கூறி இருக்கின்றனர்.
அதனை ஏற்றுக்கொண்ட விஜய், உரிய விளக்கத்தை கொடுத்திருக்கிறார். அதேபோல் கடைசி 3 நாட்களில் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சியினரின் பணப்பட்டுவாடா குறித்து சிலர் பேசி இருக்கின்றனர். இது தனது காதுகளுக்கு வந்துள்ளதாக சொன்ன விஜய், கொஞ்சம் கவலையையும் வெளிப்படுத்தி இருக்கிறார். அதனால் பாதிப்பு வருமோ என்றும் கேட்டிருக்கிறார்.
அதற்கு சில வேட்பாளர்கள், பாதிப்பு பெரியளவில் இருக்காது.. பணம் பெற்றுக் கொண்டு குடும்பம் குடும்பமாக விசில் சின்னத்திற்கு மக்கள் வாக்களித்துள்ளனர். பலரும் விசில் சின்னத்திற்கு வாக்களித்ததை வெளியில் சொல்லாமல் அமைதியாக இருக்கின்றனர் என்று தெம்பூட்டியுள்ளனர். இதனால் விஜய்யும் உற்சாகம் அடைந்துள்ளார்.
இதன்பின் கடைசியாக தேர்தல் முடிவிற்கு பின் வெற்றி பெற்றவர்கள் அத்தனை பேரும் உடனடியாக பனையூர் வந்துவிட வேண்டும் என்று விஜய் சூசகமாக கூறியுள்ளார். இதனை புரிந்து கொண்ட தவெக வேட்பாளர்கள் கொஞ்சம் ஜெர்க்காகி, எங்களுக்கு கிடைத்த மரியாதை எல்லாம் உங்களால் அண்ணா என்று சென்டிமென்ட் மழையை பொழிந்துள்ளனர். பின்னர் விஜய் ஜாலியாக பேசி சூழலை எளிதாக்கி இருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு விஜய் வென்ற தொகுதி.. அங்கு காங்கிரஸ் போட்டியிடாது.. ராஜேஷ் குமார் திட்டவட்டம்! -
"தமிழகத்தில் அண்ணாமலைக்கும் மன்சூர் அலிகானுக்கும் தான் போட்டி!" நக்கலடித்த தவெக எம்எல்ஏ முஸ்தபா -
ராஜ்யசபாவுக்கு செல்லும் ராகுலின் ‘டேட்டா கிங்’.. பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு! -
செந்தில் பாலாஜி.. கே.என் நேரு.. அடுத்து அவர்தான்.. செஸ் போர்டில் அடுத்தடுத்து காய் நகர்த்தும் விஜய்! -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
மகாராஷ்டிராவை பாருங்க.. தமிழ்நாட்டிலும் இதேமாதிரி செய்யனும்! விஜய்க்கு ஐடியா கொடுத்த அன்புமணி ராமதாஸ் -
”ஆபரேசன் அக்னி கலசம்” வன்னியர் ஓட்டுகளை அள்ளுவது எப்படி? விஜய் அமைத்த வியூகம்! பரபரப்பான ’நார்த்’ -
விஜய் அதிரடி.. தமிழக தனியார் பள்ளிகளுக்கு ₹3 லட்சம் அங்கீகார கட்டணம் ரத்தா? உண்மை என்ன? -
நீட் தேர்வு ரத்து மசோதா நிறைவேற்றப்படுமா? அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த முக்கிய பதில்! -
தவெக ஆட்சியில்.. ஆணவப் படுகொலையை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வரப்படுமா? வன்னி அரசு விளக்கம்! -
கள்ளச்சாராயம் ஒழிக்க தனிப்படை.. கள்ளக்குறிச்சியில் விஜய் அரங்கேற்றும் மாற்றம்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ்












Click it and Unblock the Notifications