விளம்பரத்துக்காக போராட்டமா.. தெர்மாகோல் அமைச்சருக்கு நெடுவாசல் பெண்கள் கண்டனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பனை எதிர்த்து நடக்கும் போராட்டம், ஊடகங்கள் வரவில்லை என்றால் தானாக நின்றுவிடும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார். இதற்கு நெடுவாசலில் போராடும் பெண்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தனியார் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது.

இதனால் ஆத்திரமுற்ற கிராம மக்கள் இரண்டாம் கட்டமாக போராட்டத்தை தொடங்கினார்கள். இந்தப் போராட்டம் இன்று 96வது நாளாக நடக்கிறது.

கொச்சைப்படுத்திய ‘தெர்மாகோல்’ அமைச்சர்

கொச்சைப்படுத்திய ‘தெர்மாகோல்’ அமைச்சர்

நெடுவாசல் மக்களின் தார்மீக போராட்டத்தை கிண்டல் அடித்து அமைச்சர் செல்லூர் ராஜு பேசி இருக்கிறார். ஊடகங்கள் நெடுவாசலுக்கு வரவில்லை என்றால் இந்தப் போராட்டம் தானாக நின்றுவிடும் என்று அவர் கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார்.

பெண்கள் கடும் எதிர்ப்பு

பெண்கள் கடும் எதிர்ப்பு

நெடுவாசல் போராட்டக் களத்தில் இருந்து தொடர்ந்து போராடி வரும் பெண்கள் கடும் எதிர்ப்பு இதற்கு தெரிவித்தனர். இந்த மண்ணையும் விவசாயத்தையும் காக்கவே நாங்கள் போராடி வருகிறோம் என்று மக்கள் கொந்தளிப்புடன் கூறுகின்றனர்.

குமுறும் மக்கள்

குமுறும் மக்கள்

சொந்த வேலைகளைக் கூட ஒதுக்கி வைத்துவிட்டு தொடர்ந்து போராடி வருகிறோம் என்றும், இந்தப் போராட்டத்தை பேஷன் என்று முதல்வர் சொல்வதும், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு விளம்பரத்திற்காக செய்வது என்று சொல்வதும் கேவலமாக இருக்கிறது என்று குமுறுகிறார்கள் போராட்டக்காரர்கள்.

Stalin Makes Fun Of Minister Sellur Raju in the assembly-Oneindia Tamil
வெட்கம் இல்லையா?

வெட்கம் இல்லையா?

மேலும், தெர்மோகோல் போட்டு அணையை மூடிய போது உலகமே அமைச்சர் செல்லூர் ராஜுவைப் பார்த்து சிரித்தது. அவர் தங்களை இப்படி சொல்வதற்கு வெட்கமாக இல்லையா என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Neduvasal women condemned Minister Sellur Raju for his comment on protest against hydrocarbon project.
Please Wait while comments are loading...