நீட் தேர்வால் சமூக நீதிக்கு ஆபத்தில்லை.. சப்பைக்கட்டு கட்டும் எச்.ராஜா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட் தேர்வால் சமூக நீதிக்கு ஆபத்தில்லை என பாஜக தேசிய செயலலாளர் எச் ராஜா தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு ஆதரவாக சென்னை வள்ளுவர்கோட்டத்தில் பாஜக சார்பில் விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா கலந்து கொண்டார்.

NEET exam is not a challenge for social justice: H Raja

அப்போது பேசிய அவர் நீட் தேர்வால் சமூக நீதிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றார். நீட் தேர்வில் தனியார் பள்ளி மாணவர்களே அதிகளவு தேர்ச்சி பெறுவதாக அவர் கூறினார்.

அரசு பள்ளிகளில் ஒழுங்காக பாடம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். மாணவி அனிதாவின் மரணம் நீட் தேர்வின் அவசியத்தை வலியுறுத்துகிறது என்றும் எச் ராஜா கூறினார்.

பகுத்தறிவு குறித்து பேசுபவர்கள் அடிப்படை அறிவின்றி பேசுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். பெரியாரின் பெயரை சொல்லி பேசுபவர்கள் எல்லாம் முட்டால்கள் என்றும் எச் ராஜா சரமாரியாக சாடினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
BJP national secretary H Raja said that NEET exam is not a challenge for social justice. Govt schools should teach properly he said.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற