புரத சத்து அதிகம் உள்ள நமக்கு மிகவும் பிடித்த தித்திக்கும் நெய் உருண்டை ஆன்லைனில்...
நெய் உருண்டை என்றாலே பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நெய் உருண்டையை அவ்வளவு ருசித்து உண்பர். பல வீடுகளில் விருந்தாளியாக வருபவர்களுக்கு உடனே எளிதாக உடனே தயாரித்து இந்த நெய் உருண்டையை கொடுப்பதை பார்த்திருப்போம்.
நெய் உருண்டை எந்தெந்த மாவில் செய்யலாம்:

நெய் உருண்டை என்பது பிரபலமான ஸ்நாக்ஸ் என்றாலும் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பொருளை கொண்டு செய்யப்படுகிறது. பெரும்பாலும் அரசி மாவு, பொரிகடலை மாவு, பாசிப்பருப்பு மாவு, மற்றும் கோதுமை மாவு, இது போன்ற பொருள்களை பயன்படுத்தி செய்கிறார்கள். இவற்றில் பாசி பருப்பு கொண்டு செய்வதே மிக ருசியாகவும், உடல் ஆரோக்கியம் அதிகரிக்கவும் பயன்படுகிறது. அதனால் பாசிப்பருப்பு கொண்டு செய்வதே சிறந்தது.
பாசிப்பருப்பு நெய் உருண்டை என்பதால் இது குழந்தைகளுக்கு மிக பிடிக்கும். பாசிபருப்பு புரத சத்து அதிகம் கொண்டது, இதனால் குழந்தைகள் மிக வேகமா வளர்ச்சி பெறுவதோடு நல்ல அறிவுடனும் விளங்குவார்கள். இதை செய்வது எளிது என்பதால் அடிக்கடி குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் கொடுத்தால் நல்ல பயன் கிடைக்கும்.
இவ்வளவு ருசியான பாசிப்பருப்பு நெய் உருண்டை எப்படி செய்வது என்று பார்போம்.
பாசிப்பருப்பு - 2 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் 1 கப்
பிஸ்தா - 3
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
முந்திரி உடைத்தது 50 கிராம்
ருசியான பாசிப்பருப்பு நெய் உருண்டை செய்முறை:
பாசிப் பருப்பை வாணலியில் சூடாகும் வரை இளஞ்சிவப்பாக வறுக்கவேண்டும். இளஞ்சிவப்பாக வறுத்த பருப்பை ஆற வைத்து மிக்சியில் போட்டு நன்றாக அரைக்கவும். அதனை சலித்து எடுத்து நைசான மாவை லட்டுக்கு வைத்துக் கொள்ளவும்.
பாசிப்பருப்பை போல் சர்க்கரையையும் ஏலக்காயையும் சேர்த்து மிக்சியில் நன்கு அரைத்து கலக்கவும். முந்திரிப் பருப்பை சிறிது நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் கலந்து ஒரு பேசினில் போட்டு வைக்கவும்.
வாணலியில் நெய் ஊற்றி உருக்கவும். நெய் முறிந்துவிடாமல் சூடான உடன் அதை மாவின் மேல் ஊற்றவும். அதை மாவை கலந்து வெது வெதுப்பான சூட்டிலேயே கையால் லட்டு பிடிக்கவும். பிடித்ததும் சிறிது நேரம் ஆறவைத்து டப்பாவில் போட்டு வைக்கலாம். சுவையான நெய் உருண்டை தாயார்.
இத்தகைய சுவையான சத்தான நெய் உருண்டை தயார் செய்து உங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து தருகிறது நேடிவ்கிருஷ்.காம் (www.nativcrush.com) . உங்களுக்கு தேவையான அளவில் நீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்தாலே போதும் உங்கள் இல்லம் தேடி வரும் நேடிவ்கிருஷ்.காம் இன் சுவை மிகுந்த நெய் உருண்டை
தமிழகத்தில் பலதரப்பட்ட ஊர்களில் சிறப்பு வாய்ந்த நொறுக்கு தீனிகளை ஒரே நேரத்தில் வாங்க முடியாமலும் அதன் பயனை அடைய முடியாமலும் நம் மக்கள் அவசர கதியில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஓட்டத்தில் துரித உணவை உண்டு உடல் நலத்தை கெடுத்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் உடல் நலத்தை காக்கவும் நேரத்தை மிச்சபடுதவும் உங்கள் தேவையை எங்கள் சேவையாக கொண்டு வெவ்வேறு ஊர்களின் சிறப்பு பெற்ற நொறுக்கு தீனிகள் இல்லம் தேடி வருகிறது.நாவில் சுவை தருகிறது. உங்கள் நேடிவ்க்ருஷ்.காம் (www.nativcrush.com).
ஒவ்வொரு ஊரில் ஒரு தின்பண்டம் சிறப்பு அவற்றை ஒரே இணையதளத்தில் மிக குறைவான விலையில் விற்கிறது நமது நேடிவ்க்ருஷ்.காம். உங்களுக்கு பிடித்த மற்றும் ஆசை பட்டு உண்ண நினைத்த பல பிரபலமான தின்பண்டங்களை மிக எளிதாக ஆன்லைனில் ஆர்டர் செய்து உங்கள் வீட்டிற்கே வந்து சேரும் தின்பண்டங்களை ருசித்து மகிழுங்கள் ..
நாம் நமது சொந்த ஊர்களை விட்டு இந்தியாவின் பல இடங்களில் வேலைக்காக மற்றும் படிக்கச் சென்றுள்ளோம். அங்கு என்னதான் பல விதமான ஸ்நாக்ஸ் சாப்பிட்டு இருந்தாலும், நமது சொந்த ஊர் ஸ்நாக்ஸ்களுக்கு ஈடாகாது என்பதை உணர்ந்து, ஒவ்வொரு ஊரின் தனித்துவமான மற்றும் அனைத்து வகையான ஸ்நாக்ஸ்களையும் எல்லோரிடமும் கொண்டு சேர்க்க உருவாக்கப்பட்டது தான்
Nativcrush.com.













Click it and Unblock the Notifications