காதல் கல்யாணம் செய்த இளம் பெண்.. கதற கதற கடத்தி சென்ற பெற்றோர்.. நெல்லையை அதிர வைத்த சம்பவம்
நெல்லை கூடங்குளம் அருகே காதலித்து திருமணம் செய்த பெண்ணை பெற்றோர் கடத்தி சென்ற புகாரில் எட்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லை: நெல்லை கூடங்குளம் அருகே காதலித்து திருமணம் செய்த பெண்ணை பெற்றோர் கடத்தி சென்ற புகாரில் எட்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் பெற்றோர் உள்பட 4 பேரை தேடி வருகிறார்கள்.
அண்மையில் தென்காசியில் குஜராத்தைச் சேர்ந்த கிருத்திகா என்ற பெண் உறவினர்களால் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த ஜனவரி 14ம் தேதி இந்த சம்பவம் நடந்தது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் தென்காசி இளைஞரைத் திருமணம் செய்துகொண்டதால் கடத்தப்பட்டதாகச் சொல்லப்பட்ட கிருத்திகா, தனக்கு ஏற்கனவே இன்னொருவருடன் திருமணமாகிவிட்டதாகக் கூறி அதிரவைத்திருக்கிறார். இந்த வழக்கு இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

சென்னையில் திருமணம்
இந்த சூழலில் நெல்லை கூடங்குளம் அருகே கடந்த ஒரு மாதத்துக்கு முன்னா் காதல் திருமணம் செய்த பெண்ணை பெற்றோரே கடத்திச் சென்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து இந்த வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ரெங்கநாராயணபுரத்தைச் சோ்ந்தவர் தங்கராஜா. இவரது மகன் முருகன்(24) இவரும் சுமிகா(19) என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் சென்னையில் வைத்து பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

கடத்தல்
காதல் திருமணத்திற்கு பின்னர் முருகன் சுமிகா ஜோடி சென்னையில் வசித்து வந்தனர். இந்நிலையில் மீண்டும் ஊருக்கு வந்து முருகன் குடும்பத்தினருடன் அவரது வீட்டில் குடியிருந்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை முருகன் வீட்டுக்கு வந்த சுமிகாவின் தந்தை முருகேசன், தாயார் பத்மா, தாத்தா தங்க முத்து உள்பட 12 பேர் வந்துள்ளனர். அங்கிருந்த சுமிகாவை ஆட்டோவில் கடத்தி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

பெற்றோருக்கு வலை
இது தொடர்பாக முருகன் அளித்த புகாரின்பேரில், கூடங்குளம் போலீசார் சுமிதாவின் பெற்றோர் உள்பட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தங்கமுத்து, சுமித், அமுதா, பாப்பா, தங்கம்மாள் உள்பட 8 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் சுமிதாவின் தந்தை முருகேசன், தாயார் பத்மா உள்பட நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருமணம்
முன்னதாக தென்காசியிலும் இதேபோன்று காதல் திருமணம் செய்த பெண் கடத்தப்பட்ட பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வழக்கில் பல திருப்பங்களும், ட்விஸ்ட்களும் அரங்கேறியது. தென்காசி மாவட்டம் கொட்டாகுளம் பகுதியைச் சேர்ந்த வினீத் சென்னையில் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். அதே மாவட்டத்தைச் சேர்ந்த இலஞ்சியில் மரம் அறுக்கும் ஆலை நடத்திவந்தவர் நவீன் படேல். குஜராத்திலிருந்து தென்காசி பகுதியில் குடியேறிய இவரது மகள் கிருத்திகா படேல் டிப்ளமோ படிப்பதற்காக சென்னைக்கு வந்தபோது, வினீத்திற்கும் கிருத்திகாவிற்கும் காதல் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் ஆறு ஆண்டுகளாகக் காதலித்ததாகவும் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் தேதி நாகர் கோவிலில் திருமணம் செய்துகொண்டதாகவும் வினீத் தரப்பு கூறுகிறது.

வாக்குவாதம்
இதையடுத்து நவீன் படேல் தனது மகள் காணாமல் போய்விட்டதாக குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து கடந்த ஜனவரி 4ஆம் தேதி குற்றாலம் காவல் நிலையத்தில் கிருத்திகாவும் வினீத்தும் நேரில் ஆஜராயினர். அப்போது கிருத்திகா வினீத்துடம் செல்ல விரும்பியதால், அவர் அனுப்பிவைக்கப்பட்டார். இந்த நிலையில், ஜனவரி 14ஆம் தேதி வினீத்தும் கிருத்திகாவும் தென்காசியில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றிருந்தனர். அப்போது அங்கு வந்த நவீன் படேலும் அவருடைய மனைவி தர்மிஷ்டா படேலும் வினீத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அதிர வைத்த கிருத்திகா
இதையடுத்து இந்த விவகாரம் குறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் ஒன்றை அனுப்பினார் வினீத். இதற்குப் பிறகு ஜனவரி 25ஆம் தேதி வினீத் தனது மனைவி கிருத்திகா, தனது தந்தை, சகோதரர் விஷால் ஆகியோருடன் சென்று குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரிக்க நவீனைக் காவல் நிலையத்திற்கு அழைத்தபோது, அவர் மாலையில் வருவதாகத் தெரிவித்தார்.. இந்த நிலையில், வினீத்தின் உறவினர் வீட்டிலிருந்து கிருத்திகா சிலரால் கடத்திச்செல்லப்பட்டார். இந்த கடத்தல் வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தனது மனைவியை மீட்டுத்தர வேண்டுமென ஆட்கொணர்வு மனு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தாக்கல் செய்தார் வினீத். இந்த நிலையில் கடத்தப்பட்டதாகச் சொல்லப்பட்ட கிருத்திகா ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், தனக்கும் தனது உறவினரான மைத்ரிக் படேல் என்பவருக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கல்யாணம் முடிந்துவிட்டதாக கூறியிருந்தார் அத்துடன் தான் கணவர், குடும்பத்தினருடன் பாதுகாப்பாக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். பின்னர், தன்னுடைய பெற்றோர் மீது தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற வேண்டுமெனவும் வினீத்திடம் கோரிக்கை வைத்தார். அத்துடன் இளம்பெண் கிருத்திகா, தனக்கு ஏற்கனவே இன்னொருவருடன் திருமணமாகிவிட்டதாகக் கூறி அதிரவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications