விளம்பர காட்சியில் கூட இதை யாரும் முயற்சிக்க வேண்டாம் என்கிறார்கள்.. இதை எப்படி அனுமதித்தார்கள்?

கோவை: நரசிபுரத்தில் இயங்கிவரும் கலைமகள் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி ஒருவர் பரிதாபமாக பலியாகி இருப்பதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கோவை நரசிபுரத்தில் இயங்கி வரும் கலைமகள் கல்லூரியில் நேற்று நடைபெற்ற பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளிவிட்டதில் 2வது மாடியில் இருந்து விழுந்த லோகேஸ்வரி என்ற மாணவி தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.
இந்த சம்பவத்திற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நெட்டிசன்களும் சமூக வலைதளங்களில் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
|
இதை எப்படி அனுமதித்தார்கள்
#கலைமகள் கல்லூரி படுகொலை
ஒரு பைக் விளம்பர காட்சியில் கூட இதை யாரும் முயற்சிக்க வேண்டாம்
இதை தேர்ந்த வல்லுனர்கள் தான் மேற்கொள்கிறார்கள் மக்கள் முயல வேண்டாம் என்று அடிகோடிட்டு காட்டி தான் விளம்பரமே ஒளிபரப்புகிறோம்
இதை எப்படி அனுமதித்தார்கள்
|
நல்லாவே இருக்க மாட்டீங்க
நல்லாவே இருக்க மாட்டீங்கடா...
கோவை கலைமகள் கல்லூரியில் #NSS கேம்ப் பயிற்சியில் தேவையில்லாமல் நடத்தப்பட்ட அபாயகரமான பயிற்சியின் போது லோகேஸ்வரி என்ற மாணவி தள்ளிவிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
கோவை கலைமகள் கல்லூரி,நரசிபுரம்
|
சரியான நடவடிக்கை தேவை
கோவை கலைமகள் கல்லூரியில் தேவையில்லாமல் நடத்தப்பட்ட அபாயமான போட்டியில் லோகேஸ்வரி என்ற மாணவி உயிரிழந்தார். இந்தக் கல்லூரி மீது சரியான நடவடிக்கை எடுக்கும் வரை விடாதீர்கள் கோவை கலைமகள் கல்லூரி,நரசிபுரம்
|
நடவடிக்கை தேவை
கோவை கலைமகள் கல்லூரியில் தேவையில்லாமல் நடத்தப்பட்ட அபாயமான போட்டியில் லோகேஸ்வரி என்ற மாணவி உயிரிழந்தார். இந்தக் கல்லூரி மீது சரியான நடவடிக்கை தேவை..
கலைமகள் கல்லூரி,நரசிபுரம்
|
வன்மையான கண்டனங்கள்
பேரிடர் மேலாண்மை பயிற்சி, பொறுமையற்ற பயிற்சி.... தனியார் நிர்வாகங்கள் தங்கள் சிறப்புக்கான அழுத்தம்.... ஆசிரியர் மீது திணிக்கப்படுகிறது.. இழப்பு இன்று மாணவி லோகேஸ்வரி மரணம். வன்மையான கண்டனங்கள்
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!