For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எம்குல பெண்களுக்கு #மகளிர்தினம் எதற்கு?.. திருச்சி உஷா மரணத்தால் குமுறும் நெட்டிசன்கள்!

திருச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளரால் கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவத்துக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    2 உசுரு பலி, இது தான் தமிழக அரசின் மகளிர் தின பரிசு..!!

    திருச்சி: போக்குவரத்து காவல் ஆய்வாளரால் கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவத்துக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    திருச்சி திருவெறும்பூர் பெல் ரவுண்டானா அருகே ஹெல்மட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியை போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்ததில் 3 மாத கர்ப்பிணி பெண்ணான உஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    போக்குவரத்து ஆய்வாளரை கண்டித்து திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இந்த சம்பவங்களுககு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

    அதிகார திமிரின் உச்சம்

    அதிகார திமிரின் உச்சம் திருச்சி கர்ப்பிணி பெண் பலி.அரசில்வாதிகள் மீது எத்தனையோ புகார்கள்.இது போன்று விரட்டி அடிக்க முடியுமா? என கேட்கிறார் இந்த நெட்டிசன்

    தட்டிக்கேட்ட மக்களுக்கு தடியடி

    ஹெல்மெட் சோதனைக்காக ஜீப்பில் விரட்டி சென்று அட்டூழியம் பைக்கை எட்டி உதைத்த இன்ஸ்பெக்டர்,சாலையில் தவறிவிழுந்து கர்ப்பிணி பலி.கொலை செய்த போலீசுக்கு தண்டனை இல்லை.. தட்டிக்கேட்ட மக்களுக்கு தடியடி.. என வேதனையை தெரிவிக்கிறார் இந்த வலைஞர்

    மகளிர் தினம் எதற்கு?

    கணவனுடன் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் போலீஸ் எட்டி உதைத்ததில் கர்ப்பிணி பலி..
    இந்த நிலையில் வாழும் எம்குல பெண்களுக்கு #மகளிர்தினம் எதற்கு? என கேட்கிறார் இந்த நெட்டிசன்

    லஞ்சமே காரணம்

    திருச்சி திருவெறும்பூர் பெல் ரவுண்டாணா அருகே
    ஹெல்மட் அணியாமல் கணவரின் வாகனத்தில் சென்ற கர்ப்பிணி பெண்ணை காவல் ஆய்வாளர் வாகனத்தோடு எட்டி உதைத்ததில் வேன் மோதி கர்ப்பிணி பெண் பலி
    இதற்கு நாமும் காரணமே நாம் அவர்கள் கேட்டவுடன்
    கொடுக்கும் லஞ்சமே காரணம் என்கிறார் இந்த வலைஞர்

    யாருக்கு மகளிர் தினம்

    டாக்டர் கனவோடு இறந்து போன அன்பு சகோதரி மருத்துவர் அனிதா.பாலியல் வன்முறை க்கு உட்படுத்தப்பட்டு இறந்த விழுப்புரம் நந்தினி. நேற்று திருச்சி யில் போதையில் காவல்துறை அதிகாரியால் கொலை செய்ய பட்ட திருச்சி உஷா. இவர்களை எல்லாம் கொன்று விட்டு.இங்கே யாருக்காக #மகளிர்தினம் கொண்டாட போகிறீர்கள்.. என கேட்கிறார் இந்த வலைஞர்

    நீதி கிடைக்க வேண்டும்

    உயிரைத் துச்சமென எண்ணிய திருச்சி காவல்துறை ஆய்வாளரை தூக்கிலிட வேண்டும்.
    சகோதரி #உஷா மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என கூறுகிறார் இந்த நெட்டிசன்

    உயிர் திரும்ப வருமா?

    சங்கிலி பறிப்பு நடக்கும் போது இப்படி புடிச்சி இருந்தா நல்லா இருக்கும், அதை விட்டு இந்த வேலை பார்த்த இவங்கள சும்மா விடலாமா.. மிஞ்சி போன அந்த போலீஸ்காரன் இடம் மாற்றம் தான் கிடைக்கும். போன உயிர் திரும்ப வருமா என கேட்கிறார் இந்த வலைஞர்

    English summary
    Netizens sharing their views on Trichy Usha dead. Police inspector kicked the two wheeler in this incident pragnant lady usha dead on the spot.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X