
சென்னை : பாஜகவுடன் இணக்கமாக இருந்ததற்கான தண்டனையை அனுபவித்துவிட்டோம், இனி ஜெயலலிதா பாணியில் அதிமுகவுடன் ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் பேசியுள்ளார். அமைச்சரின் இந்த பேச்சுக்கு டுவிட்டரில் பலரும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
பாஜகவுடன் இணக்கமாக இருந்தால் தான் மாநில அரசுக்கு நலத்திட்டங்கள் கிடைக்கும் என்று பாஜக ஆதரவு நிலைப்பாட்டிற்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் விளக்கம் தந்திருந்தார் அமைச்சர் செல்லூர் ராஜூ. இந்நிலையில் மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள அவர் பாஜகவுடன் இணக்கமாக இருந்தது தான் ஆர்கே நகர் தேர்தல் தோல்விக்குக் காரணம், இனி பாஜகவுடன் ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம் என்று பேசியுள்ளார்.
அமைச்சரின் இந்த பேச்சு அதிமுகவில் என்ன நடக்கிறது என்ற கேள்வியை ஒருபுறம் எழுப்பியுள்ளது. மற்றொரு புறம் நெட்டிசன்கள் அமைச்சரின் கருத்துக்கு தங்களது பதில் பதிவுகளை டுவிட்டரில் தெறிக்க விட்டு வருகின்றனர்.
|
உருப்படியான பேச்சு
பாஜக உடன் அதிமுக என்றுமே கூட்டணி வைக்காது, பாஜகவுடன் இணக்கமாக இருந்ததுதான் ஆர்கே நகர் தோல்விக்கு காரணம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார். இதற்கு இப்பதான் நீங்க உருப்படியா பேசிருக்கீங்க என்று பதில் டுவீட்டியுள்ளார் இவர்.
|
பாஜகவிடம் இருந்து வரும் குரல்
அமைச்சர் செல்லூர் ராஜூவின் கருத்தை வடிவேலுவின் காமெடியோடு சேர்த்து கோர்த்துவிட்டுள்ளார் இவர். அமைச்சர் பேசுவதைக் கேட்டு பிரதமர் மோடி - அங்கென்னமா சத்தம் என கேட்க செல்லூலா ர் - பேசிக்கிட்டு இருக்கேன் மாமா..! என்று சொல்வது போல மீம்ஸ் ரெயாக்கிவிட்டார் இவர்.
|
கட்சியையே குத்தகைக்கு விட்டாச்சு
பாஜகவுடன் என்றுமே அதிமுக கூட்டணி வைக்காது என்று அமைச்சர் கூறுகிறார். குத்தகைக்குக் கட்சியையே எடுத்துவிட்ட பிறகு கூட்டணி எதற்கு? என்று நக்கலாக கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
|
என்னா திறமை?
ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுக, பாஜகவுடன் இணக்கமாக இருந்ததாக நினைத்து கொண்டு, வாக்காளர்கள் அதிமுகவுக்கு வாக்களிக்கவில்லை: செல்லூர் ராஜூ. நம்ம தெர்மாகோலுக்கு இருக்குற திறமைக்கு டொனால்ட் ட்ரம்பிற்கே அரசியல் ஆலோசகராக போகலாம் என்று டுவீட்டியுள்ளார் இவர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி