தமிழகத்தை விட்டு மதுவை விரட்டியடிப்போம்.. கொட்டும் மழையில் உறுதியளித்த ராகுல்
திருச்சி: தமிழகத்தில் புதிய மதுக்கொள்கை கொண்டு வரப்படும் என திருச்சி பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.
நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து விவசாயிகளைச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டு வருகிறார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி. அதன்படி, தமிழகம் வந்துள்ள ராகுல்காந்தி, திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
ராகுல் வருவதற்கு முன்னதாகவே அங்கு மழை ஆரம்பித்து விட்டது. ஆனபோதும், மழையையும் பொருட்படுத்தாது ராகுலின் பேச்சை கேட்பதற்காக தொண்டர்கள் காத்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து மழையில் நனைந்தபடியே மேடை ஏறிய ராகுல், தமிழில் வணக்கம் கூறி தனது பேச்சை ஆரம்பித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

மகிழ்ச்சி...
தமிழக மக்களிடம் உரையாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது. காமராஜரால் முதல் முறையாக பள்ளிக்கு செல்லும் வாய்ப்பு பலருக்கு கிடைத்தது.

என் குருநாதர்...
ஏராளமானோர் நல்ல வேலை வாய்ப்பு கிடைத்து, சிறப்பாக வாழ வழிவகுத்தவர் காமராஜர். எனது குருநாதர் காமராஜர் எல்லோருக்கும் குரல் கொடுத்தார். எல்லோருடைய குரலையும் மதித்தார்.

மக்களின் விருப்பம் தெரியாது...
இன்று ஆட்சியில் இருப்பவர்கள் மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிப்பதில்லை. பிரதமராக, முதல்வராக மக்கள் விருப்பம் அறியாது ஆட்சி நடத்த முடியும் என நினைக்கிறார்கள்.

வேலையில்லாத் திண்டாட்டம்...
தமிழகத்தில் மிக முக்கியமான பிரச்னையாக வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளது. இங்கு மூன்றில் ஒருவருக்கு வேலையில்லை. அதேபோல், தமிழக அரசு இளைஞர்களின் குரலை கேட்பதில்லை

மது மூலம் வருவாய்...
மது மூலம் தமிழகத்தில் கடந்த ஆண்டு 30 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இதன்மூலம் ஒவ்வொருவரின் பாக்கெட்டில் இருந்தும் ஆண்டுக்கு பத்தாயிரம் ரூபாய் அரசுக்கு செல்கிறது.

குடியால் கெடும் குடி...
ஒருவன் குடியில் விழுந்தால் அந்த குடும்பமே பாதிக்கப்படுகிறது. மது பிரச்னையால் பெண்கள் பெரும் கஷ்டப்படுகின்றனர். தமிழகத்தில் பல குடும்பம் நாசமடைந்துள்ளது.

துயரத்தை போக்குவேன்...
தமிழக மக்களின் பிரச்னை எனக்கு தெரியும். நீங்கள் படும் கஷ்டத்தை நான் உணர்ந்திருக்கிறேன். இந்த துயரத்தை நான் போக்குவேன்.

புதிய மதுக்கொள்கை...
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் புதிய மதுக்கொள்கை கொண்டு வரப்படும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மைக் பிரச்சினை...
ராகுல் காந்தி மேடையில் பேசிக் கொண்டிருக்கையில் திடீரென மைக்கில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அங்கு கூடியிருந்த மக்கள் கூச்சலிட்டனர். பின்னர் மைக் சரி செய்யப்பட்டது.

கலந்துரையாடல்...
இந்த கூட்டத்தைத் தொடர்ந்து 145 விவசாயிகளுடன், ஜே.கே.நகரில் ராகுல் காந்தி கலந்துரையாடுகிறார்.
-
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications