வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை: மழை வரும், குடையோட போங்க!
சென்னை: தென் மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் இன்று தமிழ்நாட்டின் தென் கடலோர மாவட்டங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த ஒருமாத காலமாக விட்டு விட்டு பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக சென்னையில் வெயில் தலைகாட்டி வருவதால் தாழ்வான பகுதிகளில் தேங்கியிருந்த வெள்ளநீர் வடிந்து இயல்பு நிலை திரும்பியுள்ளது.

இந்த நிலையில் தென் மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. அது அந்தமானில் இருந்து வெகு தூரத்தில் உள்ளது. வானிலை குறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மண்டல அதிகாரி எஸ்.ஆர்.ரமணன் கூறியுள்ளார்.

இதன் காரணமாக தமிழ்நாட்டின் தென் கடலோர மாவட்டங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை அநேக இடங்களில் இன்று (வியாழக்கிழமை) பெய்யும். சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யும். நாளையும் (வெள்ளிக்கிழமை) கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதனிடையே நேற்று முன்தினம் அதிக பட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக ராமேஸ்வரத்தில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது. மேலும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மழை பதிவாகி உள்ளதாகவும் எஸ்.ஆர்.ரமணன் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications