For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உங்க வீட்டு விசேஷத்துக்கு எங்கண்ணனோட மொய்.... புது ரூட்டில் பணப்பட்டுவாடா செய்யும் கட்சிகள்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சில இடங்களில் வேட்பாளர்கள் வித்தியாசமான முறையில் பணப்பட்டுவாடா மேற்கொண்டு வருகிறார்களாம்.

எதிர்க்கட்சிக்காரர்களின் கண்களில் சிக்கினால் பிரச்சினை என்பதால் ரூம் போட்டு புதிது புதிதாக ஐடியாக்களை உருவாக்கி வருகிறார்கள் கட்சிக் காரர்கள். அந்தவகையில் சமீபத்தில் அவர்கள் கண்டுபிடித்த புதிய டெக்னிக் தான், மொய் எழுதுவது.

வாக்காளார்களின் வீடுகளில் உள்ள ஓட்டை மனதில் வைத்து மொய் என்ற பெயரில் பணம் தருகிறார்களாம் கட்சிக் காரர்கள்.

ஸ்பெஷல் டீம்...

இதற்காகவே ஒரு டீம் வேலை செய்ததாம். அவர்கள் சமீபத்தில் காதுகுத்து,சடங்கு, கல்யாணம் என விழா நடத்திய குடும்பங்கள் குறித்து கணக்கெடுத்தார்களாம்.

அண்ணனோட மொய்....

பின்னர் அவர்கள் வீட்டிற்கு வேட்பாளர் தவிர மற்றவர்கள் உறவினர்கள் போலச் சென்று, அண்ணே உங்க வீட்டுக்கு மொய் வைக்கச் சொன்னார் எனக் கூறி பணம் அல்லது பொருளாகத் தருகிறார்களாம்.

தலைக்கு இவ்ளோ...

சம்பந்தப்பட்ட வீட்டில் உள்ள ஓட்டின் கணக்கில் அந்த வீட்டிற்கு மொய் எவ்வளாவு வைக்கலாம் என முடிவு செய்கிறார்கள். அப்படியே சந்தடி சாக்கில் மறக்காமல் உங்கள் ஓட்டு அண்ணனுக்குத் தான் எனக் கூறி விடுகிறார்களாம்.

லிஸ்ட்ல எங்க பேரு இருக்கா....

இவ்வாறு பணப்பட்டுவாடா செய்யப் படுவதை அறிந்த மக்கள் தங்களுடைய பெயர் மொய் லிஸ்டில் விட்டுப் போய்விடக் கூடாது என உஷாராக அவர்களே சென்று குழுவிடம் பெயர் பதிவும் செய்து கொள்ளும் காமெடியும் நடக்கிறதாம்.

அட்வான்ஸ் புக்கிங்....

சிலர் அட்வான்சாக அடுத்த மாதம், அதற்கடுத்த மாதம் நடக்கும் விசேஷங்களுக்கெல்லாம் கூட பத்திரிக்கையோடு போய் நிற்கிறார்களாம்.

மறக்காம வந்துடுங்க...

சிலர் இதற்காகவே அவசரமாக பத்திரிக்கை அடித்து, வீட்ல விஷேசம் சீக்கிரமா மொய் கொண்டாங்க எனும் மிரட்டல் தொனியில் தெரிவித்து செல்கிறார்களாம்.

English summary
The political parties following a new method of giving money to the voters by conducting functions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X