For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாக்லேட் நிறம்... கொனார்க் சூரியக்கோவில்- புதிய 10 ரூபாய் நோட்டு ரிலீஸ்

மகாத்மா காந்தி புகைப்படத்துடன் கூடிய புதிய 10 ரூபாய் நோட்டுகளை ரிசர்வு வங்கி வெளியிட்டுள்ளது. புதிய ரூ.10 நோட்டுகளில் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் கையெழுத்து இடம்பெற்றுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    புதிய 10 ரூபாய் நோட்டு இதுதான்..வீடியோ

    சென்னை: சாக்லேட் நிறத்தில் கொனார்க் சூரியக் கோவில் உடன் கூடிய புதிய 10 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

    கடந்த 2005 இல் அச்சடிக்கப்பட்ட 10 ரூபாய் நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் இருக்கும் நிலையில், புதிய 10 ரூபாய் நோட்டுகளை விநியோகம் செய்வதற்கான மத்திய அரசின் ஒப்புதலை பெற்று அச்சடித்துள்ளது ரிசர்வ் வங்கி.

    சாக்லேட் பிரவுன் வண்ணத்தில் புதிய 10 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதில் கொனார்க் சூரிய கோயிலின் படம் இருக்கும். 100 கோடி புதிய 10 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    2016 நவம்பர் மாதம், இந்திய அரசால், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த நிலையில், 17.9 ட்ரில்லியன் ரூபாய் நோட்டுகள் சுழற்சியில் இருந்தது.

    2000,500 ரூபாய் நோட்டுகள்

    2000,500 ரூபாய் நோட்டுகள்

    ரிசர்வ் வங்கி பிங்க் நிறத்தில் புதிய 2000 மற்றும் சாம்பல் நிறத்தில் 500 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து விநியோகம் செய்தது. அதன்பின்னர், ரூபாய் நோட்டுகளின் புழக்கம் 11.1 % அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    புதிய 50 ரூபாய் நோட்டு

    புதிய 50 ரூபாய் நோட்டு

    கடந்த ஆகஸ்ட் மாதம் மஞ்சள் நிறத்தில் புதிய 200 மற்றும் கடல் நீல நிறத்தில் 50 ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டது ரிசர்வ் வங்கி. போலி நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தவே புதிய ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதாக தெரிவித்துள்ளது.

    ரூபாய் நோட்டில் மாற்றம்

    ரூபாய் நோட்டில் மாற்றம்

    கடந்த வாரம் புதிய வடிவமைப்புக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. 10 ரூபாய் நோட்டில் கடந்த 2005-ம் ஆண்டு மாற்றம் செய்யப்பட்டது. அதன்பிறகு தற்போதுதான் மாற்றம் செய்யப்படுகிறது. இப்போது 10 ரூபாய் நோட்டில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

    கொனார்க் சூரிய கோவில்

    கொனார்க் சூரிய கோவில்

    போலி நோட்டுகளை தடுப்பதற்காக மத்திய அரசு ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பை மாற்றி உள்ளது .சாக்லேட் நிறத்தில் புதிய நோட்டு உள்ளது. பின்புறம் கொனார்க் சூரியக் கோவிலின் படம் அச்சடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 1 பில்லியன் 10ரூபாய் நோட்டுக்களை அச்சடித்துவிட்டதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

    மக்கள் கைகளில் கிடைக்குமா?

    மக்கள் கைகளில் கிடைக்குமா?

    ஏற்கனவே மத்திய அரசு வெளியிட்ட 200 ரூபாய், 50 ரூபாய் நோட்டுக்கள் கலர் கலராக வெளியானதோடு சரி மக்கள் கைகளில் அதிகமாக கிடைக்கவில்லை. அதே போல இந்த நோட்டும் கிடைக்காமல் போய்விடுமா? சில்லறை தட்டுப்பாட்டை தீர்க்க அதிகமாக 10 ரூபாய் நோட்டுக்கள் கிடைக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்.

    English summary
    The Reserve Bank of India (RBI) is going to issue new Rs 10 notes under the Mahatma Gandhi series with chocolate brown colour as the base. The new note will bear the picture of the Konark Sun Temple.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X