For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொண்டு நிறுவன காப்பகத்தில் 118 பேர் இறந்ததாக அதிர்ச்சி புகார்: ஆய்வு நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: மதுரை அக்ஷயா தனியார் தொண்டு நிறுவன காப்பகத்தில் ஓராண்டில் 118 பேர் மர்மமான முறையில் இறந்ததாக உயர்நீதிமன்றத்தில் தாக்கலான மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த காப்பகத்திலிருந்து இளம்பெண் ஒருவர் நிர்வாணமாக ஓடியது தொடர்பாக விசாரிக்க பெண் ஏ.டி.எஸ்.பி.யை நியமித்தும், காப்பகத்தில் ஆய்வு நடத்தவும் உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க மதுரை மாவட்ட தலைவர் சி.முத்துராணி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்:

நிர்வாணமாக ஓடிய பெண்

நிர்வாணமாக ஓடிய பெண்

மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே கொடிமங்கலத்தில் உள்ள அக்ஷயா தனியார் தொண்டு நிறுவனத்துக்கு சொந்தமான காப்பகம் உள்ளது. இதிலிருந்து மெகர்நிஷா (21) என்ற பெண், ஜூன் 5-ம் தேதி நிர்வாணமாக வெளியே ஓடி வந்தார்.

உடல் உறுப்புகள் திருட்டு

உடல் உறுப்புகள் திருட்டு

காப்பகத்தில் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவதாகவும், உடல் உறுப்புகள் திருடப்படுவதாகவும் அவர் புகார் கூறினார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து எங்கள் குழு நடத்திய விசாரணையில், காப்பகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது தெரிந்தது.

118 பேர் மரணம்

118 பேர் மரணம்

காப்பகத்தில் தங்கியிருந்தவர்களில் 118 பேர் ஓராண்டில் இறந்ததும், அவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனை நடத்தாமல் தகனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கலெக்டரிடம் புகார்

கலெக்டரிடம் புகார்

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தோம். அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என ஆட்சியர் தெரிவித்தார். இருப்பினும் காப்பகத்தில் நடைபெறும் முறைகேடு தொடர்பான புகார் குறித்து விசாரிப்ப தாகவும் அவர் கூறினார். ஆனால் இதுவரை உறுதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதியவில்லை.

பாலியல் தொந்தரவு

பாலியல் தொந்தரவு

எனவே அக்ஷயா காப்பகத்தில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கக்கப்படுவது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து பணியிலுள்ள மாவட்ட நீதிபதியை வைத்து விசாரிக்கவும், காப்பகத்தில் தங்கியிருக்கும் மற்ற பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், பெண் நிர்வாணமாக ஓடியது தொடர்பாக டி.எஸ்.பி. அந்தஸ்தில் அதிகாரியை நியமித்து விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும்.

காப்பகங்களில் ஆய்வு

காப்பகங்களில் ஆய்வு

மேலும், தமிழகம் முழுவதும் உள்ள அரசு சாரா தனியார் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் காப்பகங்களில் ஆய்வு நடத்தி அங்கு தங்கியிருப்போரின் பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

நீதிபதிகள் உத்தரவு

நீதிபதிகள் உத்தரவு

இந்த மனு நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், காப்பகத்தில் பெண் நிர்வாணமாக ஓடியது சம்பவம் தொடர்பாக ஏ.டி.எஸ்.பி. சியாமளாதேவி விசாரணை நடத்த வேண்டும். காப்பகத்துக்கு வழக்கறிஞர் ஆணையர் டி.கீதா நேரில் சென்று, ஆய்வு நடத்தி ஜூன் 23-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

English summary
The Madras high court Madurai bench on Thursday directed the additional district superintendent of police, Madurai to probe a complaint against an NGO namely Akshaya Trust after a public interest litigation (PIL) levelled serious allegations against it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X