ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பிரசாரம்: கோவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவை: ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்ததாக கோவையைச் சேர்ந்த இரு இளைஞர்களிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

நாடு முழுவதும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவோர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும் கைது செய்யப்பட்டும் வருகின்றனர். சென்னையில் ராஜஸ்தானைச் சேர்ந்த சிலர் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்தது அண்மையில் அம்பலமானது.

NIA conducts a house search in Coimbatore

தற்போது கோவையைச் சேர்ந்த இருவர் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்ததாக சிக்கியுள்ளனர். இந்த இருவரிடமும் தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர்.

கோவை கரும்புக் கடை பகுதியில் ஒரு வீட்டிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
NIA officials today conducting a search operation in alleged ISIS sympathizer's house at in Coimbatore.
Please Wait while comments are loading...