நிலவேம்புவால் எதிர்ப்பு சக்திதான் கூடும்.. டெங்கு குணமாகாது.. அன்புமணி ராமதாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சேலம்: நிலவேம்பு கஷாயத்தால் நோய் எதிர்ப்பு சக்திதான் அதிகரிக்குமே தவிர டெங்கு காய்ச்சல் குணமாகது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

Nilavembu will not cure dengue fever: Anbumani Ramadoss

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எம்பி அன்புமணி நிலவேம்பு கசாயத்தால் எதிர்ப்பு சக்திதான் கூடுமே தவிர டெங்கு காய்ச்சல் குணமாகாது என்றார். மேலும் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கிறது என்பதை தமிழக அரசு ஒப்புக் கொள்ளவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

டெங்குவே தமிழகத்தில் இல்லை என மூடி மறைத்தது அரசு செய்த தவறு என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். மேலும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு இலவச சிகிச்சையளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

மேலும் அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Anbumani Ramadoss said Nilavembu will not cure dengue fever. It will increase immunity power he said.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற