சம்பள உயர்வு கோரி தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

நீலகிரி: சம்பள உயர்வு, வார விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தேயிலை கூட்டுறவு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் 15க்கும் மேற்பட்ட தேயிலை தொழிற்சாலை இயங்கி வருகின்றன. அதில் ஆயிரக்கணக்கானவர்கள் தேயிலை பறிப்பு மற்றும் தேயிலை தொழிற்சாலை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தொழிலாளர்களுக்கு தேயிலை கூட்டுறவு சங்கம் உரிய சம்பளம், வார விடுமுறை கொடுப்பதில்லை என தொழிலாளர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். இந்நிலையில், கூட்டுறவு சங்கம் உரிய பதிலை அளிக்காத காரணத்தால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தொழிலாளர்களை அலுவலகத்துக்குள் பேச்சுவார்த்தைக்கு விடவில்லை எனக் கூறி தொழிலாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலகத்துக்குள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Nilgiri tea estate workers protested in front of tea cooperative society office with the demand that week off and salary increment.
Please Wait while comments are loading...