சென்னை: சென்னை, புறநகர்களில் சில இடங்களில் மழை தொடர்ந்தாலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்படவில்லை. அதேபோல திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கிய மழை நேற்று இரவு வரை சில இடங்களில் நீடித்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது.

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் இதேபோல் சில இடங்களில் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. இருப்பினும் மழை படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.
இதையடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்படவில்லை. இம்மூன்று மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி