For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்டெர்லைட் ஆலையை இனி யார் நினைத்தாலும் திறக்க முடியாது.. முதல்வர் எடப்பாடியார் திட்டவட்டம்!

ஸ்டெர்லைட் ஆலையை இனி யார் நினைத்தாலும் திறக்க முடியாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை இனி யார் நினைத்தாலும் திறக்க முடியாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு, தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியுள்ளது. இன்று, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.

இதில் கடந்த 4 நாட்களாக சட்டசபையை புறக்கணித்த திமுக உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்;

மக்களை பலியிட்டு

மக்களை பலியிட்டு

தாமிர உருக்காலை தமிழகத்திற்கு வேண்டவே வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மக்களை பலியிட்டு தொழில்வளர்ச்சி உருவாகாது என ஸ்டாலின் கூறினார்.

யார் நினைத்தாலும் முடியாது

யார் நினைத்தாலும் முடியாது

அதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டெர்லைட் ஆலையை இனி திறக்க முடியாது என்றார். ஸ்டாலின் பேச்சுக்கு முதல்வர் கூறிய பதில், ஸ்டெர்லைட் ஆலையை இனி யார் நினைத்தாலும் திறக்க முடியாது.

சீல் வைக்கப்பட்டுள்ளது

சீல் வைக்கப்பட்டுள்ளது

ஆலைக்கு கொடுக்கப்பட்ட அனைத்து உரிமங்களும் ரத்து செய்யப்பட்டு நிரந்தரமாக மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.

அதிக போராட்டங்கள்

அதிக போராட்டங்கள்

போராட்டத்தில் ஈடுபட்ட விஷமிகள், சமூக விரோதிகளை தான் போலீஸ் தேடி வருகிறது.நாட்டிலேயே அதிக போராட்டங்கள் நடைபெறுவது தமிழகத்தில்தான். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் பேசினார்.

English summary
Chief Minister Edappadi Palanisamy said no one can not open the Sterlite plant anymore. He also said All licenses given to the plant have been canceled and permanently closed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X