மோடி நினைப்பது வெற்றியடைய வாழ்த்துகள்!- ரஜினி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நரேந்திர மோடியும் நானும் பரஸ்பர நலம் விரும்பிகள். அவர் என்னைச் சந்தித்ததில் எந்த அரசியலும் இல்லை, என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் அவரைச் சந்தித்துப் பேசினார் நரேந்திர மோடி.

இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும், நண்பர் ரஜினிக்கு புத்தாண்டு வாழ்த்துச் சொல்லவே அவரைச் சந்தித்தேன் என்றும் மோடி கூறியிருந்தார்.

No politics; only friendship, says Rajini on his meet with Modi

வழக்கமாக குர்த்தா-பைஜமாவில் வரும் மோடி, நேற்று தமிழர் மரபு உடையான வேட்டி சட்டையில் வந்திருந்தார். ரஜினி எப்போதும் போல வேட்டி சட்டையில் அவரை வரவேற்றார்.

ரஜினி தன் குடும்ப உறுப்பினர்களை அறிமுகப்படுத்தினார். மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா அனைவரையும் அறிமுகப்படுத்த, மோடிக்கு வணக்கம் தெரிவித்தனர்.

ரஜினி விளக்கம்

இந்த சந்திப்பு குறித்துப் பேசிய ரஜினி, "நரேந்திர மோடியும் நானும் பரஸ்பர நலம் விரும்பிகள். நான் மருத்துவமனையில் உடல் நலமில்லாமல் இருந்த போதே என்னைப் பார்க்க வந்தவர் மோடி. அவரை நான்தான் என் வீட்டுக்கு தேநீர் விருந்துக்காக அழைத்திருந்தேன்.

மோடி சிறந்த தலைவர். நிர்வாகியும் ஆவார். அவர் நினைப்பது வெற்றியடைய வாழ்த்துகள்," என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+