ஆயிரம் இருந்தாலும் கமல் அப்படி சொன்னது தப்புதான்.. இந்து தீவிரவாதம் சர்ச்சை குறித்து ’செங்ஸ்’

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்து தீவிரவாதம் என நடிகர் கமல் கூறியது தவறு என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் இருந்து தீவிரவாதம் என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு பாஜகவினரும் இந்துத்துவ அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

No religion insisting terrorism : Minister Sengottaiyan

இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் ஜனநாயக ரீதியில் அரசுக்கு சிக்கல்கள் இருப்பதாக கூறினார்.

அனைத்து அதிகாரிகளும் களத்தில் இறங்கி குழுக்களாகப் பிரிந்து மக்கள் பிரச்சனைகளை சரிசெய்து வருவதாகவும் அவர் கூறினார். அப்போது இந்து தீவிரவாதம் என கமல் கூறியது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த செங்கோட்டையன் இந்து தீவிரவாதம் என கமல் கூறியது தவறு என்றார். மேலும் எந்தவொறு மதமும் தீவிரவாதத்தை வலியுறுத்துவதில்லை என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister Sengottaiyan said Kamal's statement on hindu terrorism. He said no religion insisting terrorism.
Please Wait while comments are loading...