For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொடரும் அணி தாவல்கள்.... முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 113 எம்.எல்.ஏக்கள்தான் ஆதரவு!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: டிடிவி தினகரனுக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ. ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 113 ஆக குறைந்துள்ளது.

சட்டசபையில் மொத்தம் 234 எம்.எல்.ஏக்கள். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து 233 எம்.எல்.ஏக்கள். இதில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து அதிமுக 135, திமுக 89, காங்கிரஸ் 8, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

பெரும்பான்மை இழப்பு

பெரும்பான்மை இழப்பு

அதிமுகவின் 135 எம்.எல்.ஏக்களில் 19 பேர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இல்லை என ஆளுநரிடம் தனித்தனியே கடிதம் கொடுத்தனர். இதனால் முதல்வர் எடப்பாடியார் அரசு பெரும்பான்மையை இழந்து.

அன்று 116

அன்று 116

பெரும்பான்மைக்கு தேவை 117 எம்.எல்.ஏக்கள். ஆனால் 19 பேர் போர்க்கொடி தூக்கிய நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவு எம்.எல்.ஏக்கள் 116 ஆக குறைந்தது.

அடுத்தடுத்து சந்திப்புகள்

அடுத்தடுத்து சந்திப்புகள்

இவர்கள் அல்லாமல் அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வம் ஆகியோரும் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் இன்று தேனியில் தினகரனை திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.கே போஸ் நேரில் சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

113 எம்.எல்.ஏக்கள்

113 எம்.எல்.ஏக்கள்

இதையடுத்து தினகரன் அணியின் பலம் 22 ஆக அதிகரித்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவு 113 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Three More AIADMK legislators joining with TTV Dinakaran Camp.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X