கும்பகோணத்தில் பாஜக பிரமுகரின் மருத்துவமனையில் நர்ஸ் தற்கொலை.. உறவினர்கள் போராட்டம்
கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பாஜக பிரமுகருக்கு சொந்தமான மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்த்துவந்த வைஷ்ணவி என்ற பெண், மருத்துவமனையில் வளாக அறையில் தற்கொலை செய்து கொண்டார். இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் 'பாமா சுப்ரமணியம்' என்ற பெயரில் மருத்துவமனை ஒன்றையும் நடத்தி வருகிறார். கார்த்திகேயன் பாஜக சிந்தனை பிரிவு மாநில துணை தலைவராக உள்ளார். இவர் மருத்துவமனை மட்டுமின்றி நிதி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கார்த்திகேயனின் மருத்துவமனையில் திருவிடைமருதூர் அருகே தோப்புத்தெருவைச் சேர்ந்த 22 வயதாகும் வைஷ்ணவி என்ற இளம்பெண், கடந்த ஆறு மாதங்களாக நர்ஸாக பணியாற்றி பார்த்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள அறையில் வைஷ்ணவி திடீரன தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி போலீசாருக்கு மருத்துவமனை நிரவாகம் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளார்கள். அவர்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நர்ஸ் வைஷ்ணவியின் உடலை வந்த கைப்பற்றிய போலீசார், கும்பகோணம் அரசு மருத்துவனைக்கு பிரேத பரிசோதனைக்கான அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் உடலை ஒப்படைக்க போலீசார் முடிவு செய்தனர். அப்போது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நர்ஸ் வைஷ்ணவி சாவில் மர்மம் இருப்பதாகவும், இறந்த உடன் தங்களுக்கு முறையாக தகவலை தெரிவிக்கவில்லை என்றும் உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். உடலை பார்க்க கூட மருத்துவமனை தரப்பில் இருந்து யாரும் வரவில்லை.
வைஷ்ணவி தூக்கில் தொங்கிய விதத்தில் சந்தேகம் இருக்கிறது. எங்கள் மகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கோழை இல்லை. எங்களால் வைஷ்ணவி தற்கொலை செய்து கொண்டதை ஏற்க முடியவில்லை என்று குற்றம்சாட்டினர்.
இதையடுத்து உடலை வாங்க மறுத்த உறவினர்களிடம் போலீஸார் உரிய விசாரணை நடத்தப்படும் எனக் கூறி சமாதானம் செய்தனர். அதை தொடர்ந்து, போராட்டத்தைக் கைவிட்டு சென்றனர்.
இதனிடையே நர்ஸ் வைஷ்ணவி தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இது தொடர்பாக கும்பகோணம் கிழக்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் அழகேசன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது. உங்களுக்கு மன அழுத்தம் இருந்தால், உடனே தமிழக அரசின் 104 என்ற எண்ணிற்கு அழைத்து தற்கொலைஎண்ணத்தில் இருந்து விடுபடுங்கள். இதேபோல் சினோகா தற்கொலை தடுப்பு மையத்தின் எண்ணிற்கும் அழையுங்கள்.
சினோகா தற்கொலை தடுப்பு மையம் - 044 -2464000 (24 hours)
தமிழக அரசின் தற்கொலை தடுப்பு மையம் - 104 (24 hours)
iCall தற்கொலை தடுப்பு எண் - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm)
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications