நான் இப்போதும் இந்திய குடிமகன் தான் நம்புங்க...டி.டி.வி. தினகரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.கே. நகரில் போட்டியிடும் டிடிவி தினகரன் எந்த நாட்டு குடிமகன் என்ற குழப்பம் நிலவி வந்த நிலையில், 1995-ல் பெரியகுளம் எம்.பியாக இருந்த போதும் இப்போதும் நான் இந்திய குடிமகன் தான் என்று அவர் கூறியுள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் ஏப்ரல் 12-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தொகுதியில் சசிகலா அதிமுக வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிட உள்ளார்.

 O.Paneer Selvam Team will disappear, says TTV Dinakaran

இந்நிலையில் திருவண்ணாமலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தினகரன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை சிலை சின்னத்தில் தான் போட்டியிடுவேன். தேர்தல் ஆணைய முடிவில் எங்கள் தரப்பு நிச்சயம் வெற்றி பெற்று இரட்டை இலை சின்னத்தை பெறுவோம்.

பெரும்பான்மையான எம்எல்ஏக்களும் கட்சி நிர்வாகிகளும் எங்களை ஆதரிப்பதால் இரட்டை இலை சின்னம் எங்களுக்குதான் கிடைக்கும். 1995-ல் பெரியகுளம் எம்.பியாக இருந்த போதும் இப்போதும் நான் இந்திய குடிமகன் தான். மார்ச் 22-ம் தேதியுடன் ஓ.பன்னீர் செல்வம் அணி காணாமல் போய்விடும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, 1996-ம் ஆண்டு காஃபிபோசா சட்டத்தின் கீழ் தினகரன் கைது செய்யப்பட்டார். அப்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே. கவுல் மற்றும் ஆர். மகாதேவன் முன்பாக ஒரு ரிட் மனுவை டி.டி.வி.தினகரன் தாக்கல் செய்தார். அம்மனுவில் தாம் இந்திய குடிமகனே அல்ல என டி.டி.வி. தினகரன் தரப்பில் வாதிடப்படவில்லை. அதேபோல் 1995-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட தினகரனோ, தாம் இந்திய குடிமகன் என வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால் பெரா வழக்கில் தாம் இந்திய குடிமகனே அல்ல; சிங்கப்பூர் குடிமகன் வாதிட்டார் டி.டி.வி. தினகரன். இதை சுட்டிக்காட்டிய சென்னை உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையத்திடம் இந்திய குடிமகன் என கூறிவிட்டு குற்ற வழக்கில் தாம் சிங்கப்பூர் குடிமகன் என வெவ்வேறான நிலைப்பாடு மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது என கூறி தினகரன் வாதத்தை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
O.Paneer Selvam Team will be disappear after march 22, says TTV Dinakaran
Please Wait while comments are loading...