அரசு பங்களாவை காலி செய்த ஓபிஎஸ் எங்கே தங்கப்போகிறார்? பரபரப்பு தகவல்கள்
அரசு பங்களாவை காலி செய்யும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எங்கே தங்கப்போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: அரசு பங்களாவை காலி செய்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா வீட்டின் அருகே குடிபெயர உள்ளார். போயஸ் கார்டனில் ஜெயலலிதா வீட்டின் பின்புறம் உள்ள வீனஸ் காலனியில் அவர் தங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாரப் போட்டிக்காரணமாக ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ஓபிஎஸ் அதிமுக, சசிகலா அதிமுக என கட்சி இரண்டாக உடைந்தது.
முதல்வர் ஆசையில் இருந்த சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் தீப்பளித்தது. இதையடுத்து சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.

எடப்பாடி அரசு நெருக்கடி
இதன்காரணமாக சசிகலா ஆதரவு அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பொறுப்பேற்றது. இதையடுத்து முதல்வருக்கு அளிக்கப்பட்ட அரசு பங்களாவை காலி செய்யக்கோரி ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது.

குடைச்சல் கொடுத்த சசிகலா தரப்பு
இதனால் சென்னை கிரீன்வேஸ் சாலையில் கடந்த 2011-ம் ஆண்டு நிதி அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து அவருக்காக ஒதுக்கப்பட்ட ‘தென்பெண்ணை' பங்களாவை காலி செய்ய ஆளும் சசிகலா தரப்பு அவருக்கு குடைச்சல் கொடுத்து வந்தது.

6 மாதம் அவகாசம் இல்லை
பொதுவாக ஒரு முதல்-அமைச்சரோ அல்லது அமைச்சரோ பதவி இழந்து 6 மாதம் வரை அவருக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவை காலி செய்ய அவகாசம் தரப்படும். ஆனால், ஓ.பன்னீர்செல்வத்துக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது.

வீனஸ் காலனியில் புதிய வீடு
இதனால் கட்சியினரை சந்திக்கும் வகையில் பெரிய வீட்டை தேடி அலைந்த ஓபிஎஸ், தான் ஆசையாக வளர்த்த காளைகளை தனது உறவினர்களுக்கு தானமாக வழங்கினார். இந்நிலையில் போயஸ் கார்டனில் ஜெயலலிதா வீட்டின் பின்புறம் உள்ள வீனஸ் காலனியில் குடியேற முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் முடிவு செய்துள்ளார்.

ஓரிரு நாளில் அரசு பங்களா காலி
இன்னும் ஓரிரு தினங்களில் அரசு பங்களாவை ஓபிஎஸ் காலி செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவர் வீனஸ் காலனி வீட்டில் தனது குடும்பத்துடன் வசிக்க உள்ளார் என கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications