மழை என்றதும் மகிழ்ச்சி மட்டுமே மனதில்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வடகிழக்குப் பருவமழை சென்னையை குளிர வைத்து கொண்டிருக்கிறது.

இந்த இதமான சூழலில் மழைகுறித்து ஒன் இந்தியா வாசகர்கள் ஏராளமான கவிதைகளையும் தங்களின் கருத்துக்களையும் பகீர்ந்து வருகின்றனர். அமுதா என்பவர் பகிர்ந்துக்கொண்ட கருத்து உங்களுக்காக..

Oneindia Tamil Readers experience with Rain

மழையென்றதும் மகிழ்ச்சி மட்டுமே மனதில்.. மனதிற்குள் வளையோசை கலகல பாட்டு கேட்கிறது. எனக்கும் மழைக்கும் மட்டுமே தெரியும் சின்ன சின்ன ரகசியங்கள். என்னுடைய மகளுக்கும் எனக்கும் உள்ள நட்பு பூக்கும் தருணமே மழைத்துளிகளுடன் உறவாடி மகிழ்வுடன் எங்கள் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கையில் தான்...

எப்பொழுதும் ஒருவித கற்பனையோடு பயணிக்க வைக்கும் உறவை உணர்வை வாரி வழங்குவது இந்த மழையே. மழையால் மட்டுமே ஆயிரம் முத்தங்களை அன்புடன் அளிக்க முடியும் அதுவும் ஓரிரு நிமிடங்களில்...

நிலை கொள்ளாது தவிக்க வைக்கவும், நிமிடத்தில் மகிழ்விக்கவும், நீண்ட நேரம் காத்திருக்க செய்யவும், கவிஞர்களுக்கு கற்பனையை வழங்குவதும் இந்த மழையே...

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Here the Oneindia Tamil Readers experience with the North-East Monsoon.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற