For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2016ன் அதிரடி நிகழ்வு எது தெரியுமா? 'ஒன்இந்தியாதமிழ்' போல் முடிவு!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: 2016ம் ஆண்டின் அதிரடி நிகழ்வு எது? என்ற கேள்விக்கு ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்புதான் என்று 79% வாசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒன்இந்தியா தமிழ் தளம் சார்பில் 2016ம் ஆண்டின் அதிரடி நிகழ்வு எது? என்ற கேள்வியுடன் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கு கிடைத்துள்ள பதில்களை நீங்களே பாருங்கள்.

2016ம் ஆண்டின் அதிரடி நிகழ்வு எது என்ற கேள்விக்கு ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்புதான் என்று 79% வாசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பணம் கிடைக்காமல் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்கள்தான் தங்களை நேரடியாக பாதித்த இந்த விஷயத்திற்கு வாக்களிப்பை வாரி வழங்கியுள்ளனர் என கருதலாம்.

துணை ராணுவம்

துணை ராணுவம்

துணை ராணுவம் மூலம் மாநிலங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதுதான் அதிரடி என 6% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேற்கு வங்கத்தின் டோல்கேட்டுகளில் துணை ராணுவம் குவிக்கப்பட்டு வாபஸ் பெறப்பட்டது, தமிழக தலைமைச் செயலகத்தில் துணை ராணுவ உதவியோடு ரெய்டு நடைபெற்றது போன்றவற்றை வைத்து இக்கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

ரூபாய் நோட்டு பதுக்கல்

ரூபாய் நோட்டு பதுக்கல்

புதிய ரூபாய் நோட்டுகள் பதுக்கல் என்ற ஆப்ஷனுக்கு 4% பேர் ஆதரவு கொடுத்துள்ளது. ஏடிஎம்ல் கியூவில் நின்று பணம் கிடைக்கப்பெறாதவர்கள் ஆதங்கம் இது.

சட்டசபை தேர்தல்

சட்டசபை தேர்தல்

அம்பலமான கருப்பு பணம் என்பதற்கு ஆதரவாக 4% பேரும், சட்டசபை தேர்தலில் பாய்ந்த பணம் என்ற ஆப்ஷனுக்கு 1% பேரும் வாக்களித்தனர். இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக பணப்பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை என கூறி தள்ளி வைக்கப்பட்ட தேர்தல் தமிழகத்து இரு தொகுதிகளித்தான்.

ராமமோகன ராவ்

ராமமோகன ராவ்

இருப்பினும் , தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தல் ரத்தானது அதிரடி நிகழ்வு என 1% பேர்தான் கருத்து கூறியுள்ளனர். முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகன ராவ் வீடு மற்றும் அலுவலகங்களில் நடந்த ரெய்டுதான் அதிரடி நிகழ்வு என 5% மக்கள் கூறியுள்ளனர்.

English summary
Oneindia Tamil readers says, demonetisation is the biggest action took place in 2016.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X